என்ஜாய் எஞ்சாமி பாடல் கலைஞர் மரணம் - அறிவு வெளியிட்ட உருக்கமான பதிவு.

By Rajkumar · 2/7/2021

சந்தோஷ் நாராயணன் மகளும் பிரபல பாடகியுமான தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி  பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் வெளியான 3 வாரங்களில் யூ-ட்யூபில் 76 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அதே போல இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் இந்த பாடல் மிகப்பெரிய பிரபலமானது. அதிலும் குழந்தைகளை இந்த பாடல் மிகவும்கவர்ந்தது .

நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டு இருந்தது. ’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் 3 மாதங்களில் யூ-ட்யூபில் 25 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.'உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் தீ. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

காலா படத்தில் ‘உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் ‘மத்திய சிறையிலே’, மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. இவர்கள் இருவரும் இணைந்துப் பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் உலகமுழுவதும் பிரபலமாகி யூடியூப்பில் இதுவரை யூடுயூபில் 276 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடலில் தோன்றிய பாடகி காலமாகி இருக்கிறார்.

இந்த பாடலில் தோன்றிய பிரபல கிராமிய பாடகர் பாக்கியம்மா காலமானார் என்ற சோகமான செய்தியை அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அறிவு, "பாக்கியம்மா, இழந்த பல உயிர்களுக்காக உங்கள் இதயத்தில் இருந்து நீங்கள் பாடியுள்ளீர்கள். இப்போது உங்கள் அகால இழப்புக்கான வார்த்தைகள் இல்லாமல் சிரமப்படுகிறேன் கலைஞர் இறக்கக்கூடும், ஆனால் அவர்களுடைய கலை எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருக்கும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full