என் இல்லத்தரசியுடன், மகளீர் தினத்தன்று மனைவியடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஈரோடு மகேஷ்.

By Rajkumar · 7/3/2020

அசத்த போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஈரோடு மகேஷ். மகேஷ் அவர்கள் தன்னுடைய பள்ளிப் படிப்பை எல்லாம் ஈரோட்டில் தான் முடித்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழில் முனைவர் (Phd.,) பட்டப் படிப்பை தொடர்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரும் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியில் ஸ்டாண்டர்ட் காமெடியனாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானர். மேலும்,இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

தற்போது இவர் காமெடி நடிகர் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர், நடிகர் என பன்முகம் கொண்டவராக விளங்கி வருகிறார். தொலைக்காட்சியில் இருந்த இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான 'சும்மா நச்சுனு இருக்கு' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமமானார். மேலும், சிகரம் தொடு, ஜம்புலிங்கம், இணையதளம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மகேஷ். தற்போது விஜய் டிவியின் முக்கிய நபராக இருந்து வருகிறார் மகேஷ்.

ஈரோடு மகேஷ் பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினியான ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒரு அழகான மகளும் உள்ளார். மேலும், அவளுடைய பெயர் அமிழ்தா. இவர் ஓரு தமிழ் ஆசிரியர் என்பதால் தன் மகளுக்கு அழகான தமிழ் பெயரை வைத்து உள்ளார். மேலும், மகேஷ் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய தாய், மனைவி, மகள் தான் என்று அடிக்கடி சொல்லுவார். இவர்கள் மூவரும் தான் அவருடைய வெற்றி பயணத்திற்கு காரணம்.

https://www.instagram.com/p/B9bMjIVpCyN/

திருமணத்திற்கு பின்னர் ஸ்ரீதேவியை சின்னத்திரையில் அவ்வளவாக காண முடிவதில்லை. சமீபத்தில் ஈரோடு மகேஷ் தனது மகள் மற்றும் மனைவியுடன் விஜய் டிவி செட்டிற்கு வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் இன்று மகளீர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மகேஷ் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு # என் இல்லத்தரசியுடன் ஒன்றை விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full