கைல என்ன சரக்கா ? நைட் ட்ரெஸில் ஹரிஜா கொடுத்த போஸிற்கு குவியும் கமன்ட்.

By Rajkumar · 19/6/2020

எருமை சாணி என்ற யூடுயூப் விடியோக்கள் மூலம் பலரின் இதயங்களில் குடியேறிய ஹரிஜாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது. இதனால் சோகத்தில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஹரிஜாவை முன்பை போல காண முடியாதா என்று சோகத்தில் இருந்து வருகிறார்கள். யூடியூப் வலைதளத்தில் எருமை சாணி என்ற பக்கத்தில் விஜய் மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. எருமை சாணி’ சேனலில் இடம்பெற்ற விஜய், ஆர்ஜே விக்னேஷ்காந்த், மெட்ராஸ் சென்ட்ரல் கோபி, சுதாகர், ஷாரா, அகஸ்டின் என்று பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.

இதில் ஒரு சிலர் தற்போது சினிமாவிலும் ஜொலித்து வருகின்றனர். மேலும், எருமை சாணி சேனலில் நடித்த விஜய் மற்றும் ராஜா இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால், தாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம் என்று இருவருமே கூறினார்கள் மேலும், ஹரிஜா வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஹரிஜா, அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவருடன் ஷார்ட் பிலிம்களில் ஹரிஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து காட்சிகளில் நடித்து வருகிறார் கிரிஜா. தற்போதும் இவருக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கின்றனர். மேலும், ஹரிஜாவும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தலை காண்பித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹரிஜா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நைட் ட்ரெஸில் கையில் கிளாசுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் கையில் என்ன சரக்கா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full