இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் எறும்பு. இந்த படத்தை மன்ட்ரூ ஜி.வி.எஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் எறும்பு படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய கூலியாக இருப்பவர்தான் சார்லி. இவருடைய முதல் மனைவிக்கு ஒரு மகள், ஒரு மகன். ஆனால், இவரின் முதல் மனைவி இறந்து விடுகிறார். பின் இரண்டாவது மனைவி சூசன் சார்ஜிக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர் எம்.எஸ். பாஸ்கர் இடம் வாங்கிய கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என்று போராடுகிறார். பின் ஒரு நாள் கரும்பு வெட்ட மனைவியுடன் சார்லி வெளியூருக்கு செல்கிறார்.

Advertisement

படத்தின் கதை:

அப்போது இரண்டாவது மனைவியின் மகன் கையில் உள்ள மோதிரத்தை முதல் மனைவியின் மகனான சக்தி ரித்விக்போட்டு பாக்க ஆசைப்படுகிறார். அதை பாட்டி எடுத்து தருகிறார். ஆனால், மோதிரம் காணாமல் போகிறது. இது சார்லின் இரண்டாவது மனைவிக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று சக்தி பயப்படுகிறார். ஆனால், அவருடைய அக்கா மோனிகா சிவா அதேபோல் வேறு ஒரு மோதிரத்தை வாங்க பணத்தை சேர்க்க ஆரம்பிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது? மோதிரம் கிடைத்ததா? இதனால் வீட்டில் கலவரம் வெடித்ததா? சக்தி ரித்திவிக் நிலைமை என்ன? என்பதே படத்தின் மீதி.

நடிகர்கள் குறித்த தகவல்:

படத்தில் ஒரு ஏழை விவசாயி கதாபாத்திரத்தில் சார்லி நடித்திருக்கிறார். வழக்கம்போல் இவர் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டாவது மனைவியாக சூசன் ஜார்ஜ் நடித்திருக்கிறார். சித்தி என்றாலே கொடுமை செய்பவர் என்பதை இந்த படத்திலும் அப்படியே காண்பித்து இருக்கிறார்கள். படத்தில் அக்கா பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் மோனிகா சிவா நடித்து இருக்கிறார். அவருடைய தம்பி சக்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement

படத்தின் ஒன் லைன்:

இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் ஒரு மோதிரம் தொலைந்ததை வைத்து கதையை எடுத்திருக்கிறார். இதில் எந்த ஒரு பெரிதான சுவாரசியமும் விறுவிறுப்பும் இல்லை. இருந்தாலும் எடுத்த கதையை தெளிவாக கொடுத்திருக்கிறார். ஆனால், ஆடை விஷயத்தில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்திற்கு ஒளிப்பதிவும் இசையும் பக்க பலத்தை கொடுத்திருக்கிறார்கள்.

Advertisement

படம் மெதுவாக நகர்கிறது. இருந்தாலும், என்ன மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதை இயக்குனர் சிறப்பாக கொடுத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு சாதாரண ஏழை குடும்பத்தின் கதை.
ஆனால், கதைக்களம் இன்னும் அழுத்தமாக காண்பிக்கப்பட்டிருந்தால் பார்வையாளர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கும். ஒரு குறும்படத்தை பார்க்கும் அனுபவத்தை படம் கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருந்திருக்கிறது.

நிறை:

நடிகர்களின் நடிப்பு

மோனிகாவின் நடிப்பு சிறப்பு

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

ஒரு எளிமையான வாழ்வியல் கதை

குறை:

கதை மெதுவாக செல்கிறது

கதை களத்தில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஆங்காங்கே நிறைய லாஜிக் குறைபாடுகள்

ஒரு கிராம் மோதிரத்தை வைத்து ஒரு நீண்ட குறும்படத்தை கொடுத்திருக்கிறார்

மொத்தத்தில் எரும்பு- மெதுவாக நகர்கிறது

Advertisement