4 நக்கீரன் புக்க பாத்து எடுத்திருந்தாலே உருப்படியா எடுத்து இருக்கலாம் - ET படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்.

By Arun · 11/3/2022

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இன்று வெளியா கி உள்ளது. ஆனால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என்று அரசியல் கட்சியினர் பலர் போராட்டம் செய்கிறார்கள். கடந்த வருடம் வந்த ஜெய் பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் வன்னியர்களை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டப்பட்டுள்ளதாக பாமக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு வந்த சோதனை:

அது மட்டுமில்லாமல் பல வன்னியர் சங்கத்தினர் ஜெய் பீம் படத்திற்கு எதிராக கோஷங்களை செய்திருந்தார்கள். இதனால் படக்குழுவினர் அந்த காட்சியை படத்திலிருந்து மாற்றிவிட்டனர். இருந்தும் இந்த பிரச்சினையின் காரணமாக தற்போது தங்களிடம் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக கட்சி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து மாவீரன் மஞ்சள் படை தலைவர் ஜெ குரு கனலரசன் அவர்கள் எதற்கும் துணிந்தவன் படம் வெளியிட கூடாது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=iCACKfr0pjw

படம் வெளியிட நடந்த பிரச்சனை:

அதுமட்டும் இல்லாமல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சரவணா திரையரங்கில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிட இருந்தது. அந்த நேரத்தில் பாமகவினர் அங்கு சென்று அராஜகம் செய்ததால் அந்தப் படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டது என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்தது. இப்படி பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. மேலும், இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

ப்ளூ சட்டை விமர்சனம் :

இதனால் ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தார்கள். ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், முதல் நாளே புக்கிங் சரியாக இல்லாததால் பல திரையரங்குகளில் இந்த படத்தின் காட்சிகள் ரத்தானது. என்னதான் இந்த படத்தை பலர் விமர்சனம் செய்தாலும் ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்காக தான் காத்துகொண்டு இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இன்று ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். இந்த படம் வெளியான போதே இந்த படத்தை கேலி செய்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை போட்டு வந்த மாறன், தன்னுடைய யூடுயூப் விமர்சனத்தில் இந்த படத்தை தாறு மாறாக விமர்சனம் செய்து உள்ளார். அதிலும் பொள்ளாச்சி சம்பத்தை மையாக எடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை எடுப்பதற்கு முன்கபாக நக்கீரன் பத்திரிக்கையில் வந்த 4 செய்தியை வாங்கி படித்து இருந்தாலே உருப்படியான படமாக இது இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full