தயவு செஞ்சி சீரியல்ல இருந்து விலகிடாதீங்க - எதிர் நீச்சல் அதிரையின் இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் ஏக்கம்.

By subhashini · 23/3/2024

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து நடிகை ஒருவர் விலக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், கடந்த சில வாரங்களாகவே சீரியலில் தர்ஷினி டிராக் தான் சென்று கொண்டிருக்கின்றது. மர்ம நபர்கள் தர்ஷினியை கடத்தி விடுகிறார்கள். ஆனால், அவர்கள் குணசேகரன் சொல்லி தான் கடத்தினார்கள் என்பது வரும் நாட்களில் தெரிய வந்தது. தர்ஷினிக்கு போதை போதை ஊசி போட்டு அவளை சுய நினைவு இல்லாத படி குணசேகரன் அடைத்து வைக்க சொல்கிறார். இன்னொரு பக்கம் தர்ஷினியை காணவில்லை என்று அவருடைய அம்மா மற்றும் சித்திமார்கள் தேடி அலைந்தார்கள். கடைசியில் தர்ஷினியை கடத்தி வைத்தது ஈஸ்வரி தான் என்று அவரை போலீசார் கைது செய்தது.

ஆதிரை கதாபாத்திரம் :

ஒரு வழியாக தர்ஷனியை போலீஸ் மீட்டுக் கொண்டு விட்டார்கள். ஆனால், குணசேகரன் தான் இது செய்தது என்று தெரியவில்லை. தற்போது சீரியலில் தர்ஷினிக்கு திருமணம் செய்யும் ஏற்பாடுகள் தான் சென்று கொண்டு இருக்கிறது. தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ள மெய்யப்பன் தங்கை சொல்கிறார். இதனால் வீட்டில் பல கலவரங்கள் வெடிக்கிறது. இப்படி அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் சத்யா தேவராஜன்.

சத்யா குறித்த தகவல்:

இவர் மாடலிங் மூலம் சத்யா தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் இவர் சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதற்கு பிறகு இவர் அருவி என்ற சீரியலின் மூலம் தான் நடிகையாக நடிக்க தொடங்கினார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது எதிர்நீச்சல் சீரியல் தான். சீரியலில் மட்டும் இல்லாமல் இவருக்கு நிஜ வாழ்க்கையில் திருமணம் ஆகிவிட்டது. இவருடைய கணவரும் ஒரு பிரபலம் தான். திருமணத்திற்கு பிறகும் இவர் நடிக்க இவருடைய கணவர் ஒத்துக் கொண்டதால் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை நடித்து வருகிறார் சத்யா.

View this post on Instagram

A post shared by Sathya Devarajan (@sathya_devarajan_official)

சத்யா பதிவு:

இந்த நிலையில் சத்யா அவர்கள் instagramல் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இனி வருகிற நாட்களில் நான் புது ப்ராஜெக்ட்களை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். இது தொடர்பாக யாரெல்லாம் எனக்கு ஏற்கனவே தொடர்பு கொண்டீர்களோ என்னை இப்போது தொடர்பு கொள்ளலாம். நல்ல டீம், நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார். இதை பார்த்த பலருமே, நீங்கள் எதிர்நீச்சல் தொடரில் இருந்து விலகப் போகிறீர்களா? ஏன்? வேறு சீரியலில் நடிக்க தயாராக இருக்கிறீர்களா? என்று எல்லாம் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு சத்யா, இல்லை என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full