வெளியே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு வருவார்னு நெனச்சேன் - மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் குறித்து கமலேஷ்.

By Rajkumar · 8/9/2023

மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் குறித்து நடிகர் கமலேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தமிழில் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார்.

மாரிமுத்து திரைப்பயணம்:

ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து ரசிகர்கள் முதலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை எடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இந்த படத்தை சங்கர் இயக்கி வருகிறார். இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=wGeccZ00_mU

மாரிமுத்து திடீர் மரணம் :

உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மாரிமுத்துவின் இறப்பு குறித்து அவருடன் நடித்த நடிகர் கமலேஷ் பேட்டியில் கூறியிருப்பது, அவர் காலையில் டப்பிங் செய்வதற்கு
6:00 மணிக்கே வந்துவிட்டார்.

கமலேஷ் அளித்த பேட்டி:

நானும் டப் செய்யணும் என்று எட்டு மணிக்கு வந்தேன். டப்பிங் செய்திருக்கும் போது அவருக்கு திடீர் என்று ஒரு மாதிரியாக ஆகி மூச்சு திணறல் ஏற்படுது என்று சொல்லி வெளியே வந்தார். அவர் வெளியே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு வருவார் என்று நான் டப்பிங் செய்ய உள்ளே சென்றேன். அரை மணி நேரம் ஆகியும் அவர் வரவில்லை என்று வெளியே போய் பார்த்தேன். அவர் இல்லை. ஃபோன் செய்து பார்த்தால் எடுக்கவில்லை. பின் அவருடைய மகள் தான் எடுத்தார்.

https://www.youtube.com/watch?v=hbOjjEJL1bE

கடைசி நிமிடங்கள் குறித்து சொன்னது:

எங்களிடம் சொல்லாமலேயே அவரே வண்டி ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். மருத்துவமனையில் இறங்கும்போதே அவரால் முடியவில்லை. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டார். இது எங்களுக்கு பேர் அதிர்ச்சியை அளிக்கிறது என்று எமோஷனலாக கமலேஷ் பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full