மாரிமுத்து இறுதியாக தன் போனில் எடுத்த வீடியோ என்ன தெரியுமா ? என்ன மனசு மனுசனுக்கு

By subhashini · 13/9/2023

மறைந்த நடிகர் மாரிமுத்து தன் போனில் கடைசியாக பதிவிட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் மாரிமுத்துவின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து.

இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தமிழில் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

மாரிமுத்து மரணம்:

அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார்.

View this post on Instagram

A post shared by Monisha Vijay (@monishavijay_official)

பிரபலங்கள் இரங்கல்:

டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது. உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன் தினம் அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இவருடைய இறப்பு கனவில் கூட யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத நினைத்துப் பார்க்காத அளவிற்கு ஒன்றாக இருக்கிறது.

மாரிமுத்து குறித்த வீடியோ:

இவருடைய மறைவிற்குப் பிறகு சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் மாரிமுத்து குறித்த வீடியோக்கள் தான் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மாரிமுத்து தன்னுடைய செல்போனில் கடைசியாக பதிவு செய்த வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் எதிர்நீச்சல் சீரியலில் தன்னுடைய மகளாக நடித்திருக்கும் தர்ஷினி என்ற சிறுமியின் பிறந்தநாளுக்கு மாரிமுத்து வாழ்த்து கூறியிருக்கிறார். எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் மோனிஷா.

https://www.youtube.com/watch?v=Mzf1z1bs5L8

அந்த வீடியோவில் மாரிமுத்து, பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா. நான் மோனிஷாவுக்கு அப்பா என்றால் உனக்கும் தான் அப்பா. என்னுடைய மகளை எனக்கு எந்த அளவிற்கு பிடிக்குமோ அதே அளவுக்கு உன்னையும் எனக்கு பிடிக்கும். நீங்கள் இருவரும் உங்களுடைய திறமைகளை இன்னும் அதிக அளவில் வெளி கொண்டு வர வேண்டும். இன்னும் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும். உங்களுக்கு நாடுகளின் மீது அதிக ஆசை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். ஆகையால், நீங்கள் பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்று உன் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். உன்னுடைய சகோதரியை போலவே நீயும் குத்து சண்டை,வாள் வீச்சு என்று பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full