மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுத எதிர் நீச்சல் சீரியல் நடிகர் நடிகைகள் - உருக்கமான வீடியோ.

By Rajkumar · 8/9/2023

எதிர் நீச்சல் தொடர் மாரிமுத்துவின் இறப்பு சின்னத்திரை மற்றும் சினிமா துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மாரிமுத்துவின் உடலை கண்டு எதிர் நீச்சல் சீரியல் நடிகர் நடிகைகள் கதறி அழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மாரிமுத்து. இவர் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி இருக்கிறார். சீரியலில் இவர் மதுரை ஸ்லாங்கில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார்.

மேலும், இவர் இந்த சீரியலில் வில்லனாக நடித்து இருக்கிறார். இந்த சீரியலில் இவருடைய பஞ்சுகள், வசனங்கள் எல்லாமே பார்வையாளர் மத்தியில் ஈர்ப்பை பெற்று இருக்கிறது.இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.அதன் பின் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களின் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=hbOjjEJL1bE

இதனை எடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இந்த படத்தை சங்கர் இயக்கி வருகிறார். பல பிரச்சினைகளுக்கு பிறகு இந்த படத்தின் படபிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலிலும் பட்டய கிளப்பிக் கொண்டு வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் மாரிமுத்து மாரடைப்பால் காலமாகி இருக்கிறார். மாரிமுத்து இன்று காலை ஒரு சீரியலின் டப்பிங்கிற்காக சென்று இருக்கிறார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு தானே ஓட்டி சென்று மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=CN4zspqEgYQ

அவருக்கு வயது 56. மாரிமுத்துவின் உடல் விருகம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்து. பல்வேறு சினிமா பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் தொடரில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதிலும் குறிப்பாக கனிகா, மதுமிதா போன்ற பலர் அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full