படிப்ப பத்தி எதாவது தெரியுமாடி உனக்கு - எதிர் நீச்சலில் கல்வி குறித்த காட்சி. ஜோவிகாவை டேக் செய்யும் ரசிகர்கள்.

By Arun · 12/10/2023

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். சீரியல் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

https://twitter.com/kollywood0/status/1710357008216690771

இந்த தொடரில் மற்ற கதாபாத்திரங்களை விட மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு தான் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படி ஒரு நிலையில் மாரிமுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாரடைப்பால் காலமானார். மாரிமுத்து காலமானதை தொடர்ந்து அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து ஆதி குணசேகரனுக்கு பதிலாக நடிகர் வேல ராம மூர்த்தி கமிட் ஆகி இருக்கிறது. ஆரம்பத்தில் இவரை குணசேகரனாக ஏற்க மறுத்தாலும் தற்போது இவரது நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. மாரிமுத்து இருந்த வரை இந்த தொடரில் அவர் பேசிய பல வசனங்கள் சமூக வலைதளத்தில் அடிக்கடி வைரலானது. இப்படி ஒரு நிலையில்எதிர் நீச்சல் ப்ரோமோ ஒன்றில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by SunTV (@suntv)

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சமீபத்தில் பிக் பாஸில் நடைபெற்ற சம்பவத்துடன் ஒப்பிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்வி விஷயத்தில் விசித்திரா மற்றும் ஜோவிகா இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது. பிக் பாஸில் வந்த முதல் நாளே தன்னிடம் விசித்ரா படிப்பு பற்றி பேசியதை கூறி இருந்தார். பின்னர் இது பெரிய விவாதமாக மாற 'நான் டாக்டரோ இஞ்சினியரோ ஆக சொல்லவில்லை ஒரு +2 வாவது முடி என்று தான் சொன்னேன் என்றார்.

அதற்கு ஜோதிகாவோ எனக்கு படிப்பு வரல அதனால எனக்கு ஒன்றும் தெரியாது என்று அர்த்தம் கிடையாது எனக்கு எழுத படிக்க தெரியும் என்று சொன்னதும், எங்க தமிழ்ல எழுதி பாப்போம் என்று கூறினார். இப்படியாக இவர்கள் இருவருக்கும் நடந்த சண்டை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர விசித்திராவிற்கு ஆதரவாக சிலரும் ஜோவிகாவிற்கு ஆதரவாக சிலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதே போல கமல் கூட இந்த விவகாரத்தில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நைஸாக நழுவினார். இருந்தும் படிப்பு தான் மிகவும் முக்கியம் என்று பலர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தான் எதிர் நீச்சல் தொடரில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ பிக் பாசை குறிப்பிட்டு இருப்பது போல கூறி வருகின்றனர். மேலும். இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் வனிதா மற்றும் ஜோவிகாவின் ஐடிக்களை டேக் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full