எதிர்நீச்சல் திருச்செல்வம் மனைவி யார் தெரியுமா ? சீரியலுக்கும் அவருக்கும் இப்படி ஒரு தொடர்பா ?

By Rajkumar · 1/7/2023

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனரின் மனைவி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் டப்பிங் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து வந்தார். பின் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார்.

அதன் பிறகு தான் திருச்செல்வம் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார். அந்த வகையில் இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரின் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரின் மூலம் நடிகராகவும் திருச்செல்வம் அறிமுகமானார். அதன் பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும், இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்த தொடருக்காக பல விருதுகள் வாங்கி இருக்கிறார்.

திருசெல்வம் இயக்கிய சீரியல்கள்:

இதனை தொடர்ந்து இவர் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய சீரியலில் நடித்தும் இருக்கிறார். மேலும், திருச்செல்வம் சீரியல் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.மேலும், இவர் இயக்கத்தில் வெளிவந்த சீரியல்கள் பெரும்பாலும் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதைகளாக அமைந்திருக்கும்..

எதிர்நீச்சல் சீரியல்:

தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட தொடர். சீரியலில் சில வாரங்களாகவே ஆதிரை- அருண் திருமணம் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் தீட்டினார்கள் . தற்போது சீரியலில் அருண்- ஆதிரை திருமணம் நடைபெறும் என்று பலர் எதிர்பார்ப்போடு இருந்தார்கள்.

சீரியலின் கதை:

ஆனால், கரிகாலனுக்கும் -ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருக்கிறது.இதனைத்தொடர்ந்து என்ன நடக்கும்என்ற பல எதிர்ப்பார்ப்புகளுடன் சீரியல் சென்றுகொண்டு இருக்கின்றது. மேலும்,இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இவருடைய மனைவி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

திருச்செல்வம் மனைவி:

அதாவது, இவருடைய மனைவியின் பெயர் பாரதி. இவர் ஒரு சிவில் இன்ஜினியராக இருக்கிறார். இவர் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியலில் தேவயானி நடித்த அபிநயா என்ற கதாபாத்திரம் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை பார்ப்பார். அந்த ரோலுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது திருச்செல்வம் மனைவி தான். அதோடு இவருடைய மகளின் பெயர் அபிநயா. அதனால் தான் சீரியலில் தேவயானியின் பெயருக்கு அபிநயா என்று பெயர் வைத்திருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full