குணசேகரன் வந்துவிட்டார், முகத்தை மறைத்து சஸ்பென்ஸ் வைத்த சன் டிவி- இப்போதே கண்டுபிடித்து கலாய்த்த ரசிகர்கள்.

By Arun · 2/10/2023

எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் வருகிறது. இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து.

https://www.youtube.com/watch?v=78IrYyVKSME

இவருக்காவே இந்த சீரியலை பார்த்தவர்கள் பலர் உண்டு. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன் மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார்.

டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது. உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் நிலைமை என்னாகப் போவது என்ற கேள்விக்குறி தான் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமே ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான். அவருடைய வசனங்களும், உடல் மொழியும் தான் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம். இனி இந்த சீரியலில் இவர் நடிக்க முடியாது என்றவுடன் அடுத்த குணசேகரன் யார்? என்ற சர்ச்சை தான் கிளம்பியது. இதனை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்த வேல ராம மூர்த்தி மாரிமுத்து ரோலுக்கு அணுகப்பட்டார்.

இதுகுறித்து பேசிய வேல ராம மூர்த்தி 'எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பண்ண சொல்லி என்னிடம் சேனல் தரப்பில் கேட்டது உண்மைதான். ஆனால், இப்ப நான் சினிமாவில் பிஸியாக இருக்கிறேன். வேலராமமூர்த்தி பேட்டி: இப்பவும் நான் படப்பிடிப்பில் தான் இருக்கிறேன். சீரியலுக்கான நேரம் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த மாதம் 20ஆம் தேதிக்கு மேல்தான் சினிமா சூட்டிங் முடிகிறது. அந்த தொடரில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதான். ஆனால், அது குறித்து நான் இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

இப்படி இவர் அளித்திருந்த பேட்டி வெளியானதை தொடர்ந்து பலருமே ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்தால் பொருத்தமாக இருக்குமா என்று விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதன் பின் இயக்குனர் வேல ராமமூர்த்தியை எதிர்நீச்சல் அணி இறுதி செய்து அதற்க்கான ஷூட்டிங் தொடங்கியதாகவும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியானது.

வேல ராமமூர்த்தி தான் அடுத்த குணசேகரன் என்று ஊருக்கே தெரிந்துவிட்டது. ஆனால், இந்த விஷயத்தை மாரிமுத்து இறந்ததில் ஒரே பில்ட்டப்பாக கொடுத்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான எதிர் நீச்சல் ப்ரோமோவில் புதிய Ags வருவது போல காண்பித்து இருந்தனர். ஆனால், அதில் கூட முகத்தை காண்பிக்காமல் சஸ்பென்ஸ் வைத்தனர். இதனை கண்ட ரசிகர்கள் இது வேல ராமமூர்த்தி தான்னு ஊருக்கே தெரியுமே , இதுல என்ன சர்ப்ரைஸ் என்று கேலி செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full