ரசிகர்களை கவர்ந்தாரா புதிய குணசேகரன் - எதிர் நீச்சல் தொடரின் கடந்த வார TRP. அதிர்ந்து போன ரசிகர்கள்.

By Rajkumar · 12/10/2023

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மேலும், அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது.சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் ஜீவானந்தத்தை பழிவாங்க போலீசாக இருக்கும் கிள்ளிவளவனை சந்தித்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள திட்டம் போட்டார்கள்.

மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததால் அவரிடத்தில் யாரையும் பூர்த்தி  செய்யவில்லை என்பது நன்றாக தெரிகிறது. இதற்கு இடையே எதிர் நீச்சல் நாடகத்தின் ஆதி குணசேகரன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறியதாக கதை நகர்கிறது.இந்நிலையில், ஆதி குணசேகரனுக்கு அண்ணன் ஒருவர் இருப்பதாக தற்போது கதையின் போக்கு நகர இருக்கிறது. இதன் மூலம் புது கேரக்டர் ஒன்று அறிமுகமாகி கதைக்களம் அவரைச் சுற்றி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திற்கு இணையாக ஆதிபகவன் என்ற கதாபாத்திரத்தை சீரியல் குழு உருவாக்கியுள்ளது.  இதற்கான லீட் காட்சியும் அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் இடம் பெற்றது. ஆதிகுணசேகரனின் அண்ணனாக இந்த ஆதிபகவன் கதாபாத்திரம் இடம்பெறும் எனவும் இனி வரும் எபிசோடுகள் ஆதிபகவனை மையப்படுத்தி நகரும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு என ஒரு பென்ச் மார்க் செட் ஆகியிருந்தது அதனை மற்றொருவரை பிடிக்க முடியாது. வேலராமமூர்த்தி அவருடைய ஸ்டைலில் அவர் நிச்சயம் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற அவரால் ஈடுபடுத்தி நடிக்க முடியுமோ அளவிற்கு அவர் நடிப்பார். அதற்கான கால அவகாசம் கொடுத்து ஆகவே வேண்டும். அதற்காக மாரிமுத்து உடனே இவரை ஒப்பிட்டு பேச முடியாது. இவருக்கு பதில் இவர் வேண்டுமென்றால் போடலாம்.

ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாகவில்லை. என்பது போன்ற பலவிதமான விமர்சனங்கள் வந்து வண்ணமே இருக்கின்றது. ஆனால், ஒரு தரப்போ வேல ராமமூர்த்தியும் சிறப்பாக நடிக்கிறார் என்று கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையல்ல வேல ராம மூர்த்தி நடித்த முதல் வாரத்திலேயே எதிர் நீச்சல் Trp எகிறி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு Trp யை கடந்த வாரம் பெற்று இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full