படு வெயிட்டான குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வெயிட்டான சம்பளத்தை பேசியுள்ள வேல ராம மூர்த்தி. எவ்வளவு தெரியுமா ?

By subhashini · 3/10/2023

எதிர்நீச்சல் சீரியலில் புதிய ஆதி குணசேகரனாக நடிக்கும் நடிகர் வாங்க இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. இவருக்காவே இந்த சீரியலை பார்த்தவர்கள் பலர் உண்டு.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார்.

மாரிமுத்து இறப்பு:

டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது. உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இவரின் இழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் நிலைமை என்னாகப் போவது என்ற கேள்விக்குறி தான் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும், எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமே ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான்.

https://www.youtube.com/watch?v=78IrYyVKSME

வேலராமமூர்த்தி பேட்டி:

அவருடைய வசனங்களும், உடல் மொழியும் தான் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம். இனி இந்த சீரியலில் இவர் நடிக்க முடியாது என்றவுடன் அடுத்த குணசேகரன் யார்? என்ற சர்ச்சை தான் கிளம்பியது. இதனை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்த வேல ராம மூர்த்தி அவர்கள் தான் மாரிமுத்து ரோலுக்கு அணுகப்பட்டார். இதுகுறித்து வேல ராம மூர்த்தி, ‘எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பண்ண சொல்லி என்னிடம் சேனல் தரப்பில் கேட்டது உண்மை தான். ஆனால், இப்ப நான் சினிமாவில் பிஸியாக இருக்கிறேன். இப்பவும் நான் படப்பிடிப்பில் தான் இருக்கிறேன். சீரியலுக்கான நேரம் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அது குறித்து நான் இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

புதிய ஆதி குணசேகரன் குறித்த தகவல்:

இப்படி இவர் அளித்திருந்த பேட்டி வெளியானதை தொடர்ந்து பலருமே ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்தால் பொருத்தமாக இருக்குமா? என்று விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். பின் இயக்குனர் வேல ராமமூர்த்தியை எதிர்நீச்சல் சீரியலில் இறுதி செய்து அதற்க்கான ஷூட்டிங் தொடங்கியதாகவும் உறுதிபடுத்தப்பட்டது. அதற்கான ப்ரோமோ கூட வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ஆதி குணசேகரன் ஆக நடிக்க நடிகர் வேலு ராமமூர்த்தி வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலராமமூர்த்தி வாங்கிய சம்பளம்:

ஆரம்பத்தில் இவர் குணசேகரனாக நடிக்க முடியாது என்று பல காரணங்களை சொல்லி வந்தவுடன் சன் டிவி நிறுவனம் டபுள் மடங்கு சம்பளத்தை கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள். உடனே வேல ராமமூர்த்தியும் ஓகே சொல்லி இருக்கிறார். இன்னும் சில தினங்களில் எதிர்நீச்சல் சீரியலில் இவர் என்ட்ரி கொடுக்கவும் இருக்கிறார். மேலும், இவர் இந்த எதிர்நீச்சல் சீரியலுக்காக ஒரு மாதத்திற்கு 16 முதல் 18 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இது இந்த சம்பளம் இவர் படங்களில் வாங்குவதை விட அதிகம் ஆகும். அதுமட்டுமில்லாமல் சீரியலிலே இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை வேலராமமூர்த்தி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full