எதிர் நீச்சல் Vs கயல் வருடத்தின் முதல் வாரத்திலே எதிர்நீச்சல் சாதனை செய்த் சீரியல்.

By Ajju · 13/1/2023

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் செய்திருக்கும் சாதனையை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடக்கத்தில் இந்த தொடருக்கு பல எதிர்புகள் எழுந்தது. ஆனால், சமீப காலமாக இந்த தொடரில் பல பெண் புரட்சி வசனங்கள் இடம்பெற்று வருவதால் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரசிகர்களை ஈர்க்கும் எதிர்நீச்சல் :

இதனால் டி ஆர் பியிலும் முன்னணியில் இருக்கிறது இந்த சீரியல். மேலும் மற்ற சீரியல்களின் ப்ரோமோக்களை பார்க்கும் ரசிகர்கள் கூட இந்த சீரியலின் ப்ரோமோக்களையும் கேட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த சீரியல் ரசிர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. இந்த நிலையில் வாரத்தில் இறுதியில் கிராமம் முதல் நகரம் வரை எல்லா இடங்களிலும் சீரியலை எந்த அளவிற்க்கு பார்க்கின்றனர் என்பதை அளவிட டி ஆர் பி எடுக்கப்பட்டு வெளியாகும்.

பல திருப்பங்களுடன் கதை :

ஒவ்வொரு வாரமும் புது புது திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது பட்டம்மாள் அப்பத்தாவின் சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு மருமகள்கள் அனைவரும் சென்று விட்டனர். சக்தியும் மனம் மாறி ஜனனிக்கு ஆதரவாக வீட்டின் தலைவரான குணசேகரனை எதிர்த்து பேச தொங்கி உள்ளார். அதோடு கரிகாலன் கட்டிய வீட்டை பார்த்து குடும்பமே ஆடிப்போயிருக்கும் நிலையில் ஆதிரை காதலிக்கும் விஷியமும் கரிகாலனுக்கு தெரிய வருகிறது.

டி ஆர் பியில் முன்னிலை :

இப்படி பல திருப்பங்கள் நடப்பதினால் ரசிகர்களின் ஆதரவு இந்த சீரியலுக்கு மிகவும் அதிகரித்துள்ளது. விவரங்களின் அடிப்படையிலும் டி ஆர் பி அடிப்படையில் பார்த்தல் எதிர்நீச்சல் சீரியல் 9.48 டி ஆர் பி அளவை பெற்றிருக்கிறது. இது கடந்த வாரத்தை விட அதிகமாகும். கடந்த வாரம் 9.09 பெற்று ஆறாவது இடத்தில் இருந்தது எதிர்நீச்சல் சீரியல். ஆனால் தற்போது நல்ல அளவில் முன்னேறி இருக்கிறது.

நான்காவது இடம் :

இதற்கு காரணம் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்குமோ என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைப்பதுதான். மேலும் இந்த சீரியல் டி ஆர் பி அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கிறது, கடந்த வாரம் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது மற்றொரு பிரபல சிரியலான இனியாவை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு வந்துள்ளது எதிர்நீச்சல். இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வந்தாலும் இனியா சீரியலை விட குறைவான அளவே முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full