12 வருடங்களாக குழந்தை இல்லை - எதிர்நீச்சல் ஞானம் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்

By Manikandan · 16/2/2023

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் தன்னுடைய கணவர் கமலேஷ் குறித்து அவரது மனைவி கூறியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடக்கத்தில் இந்த தொடருக்கு பல எதிர்புகள் எழுந்தது. ஆனால், சமீப காலமாக இந்த தொடரில் பல பெண் புரட்சி வசனங்கள் இடம்பெற்று வருவதால் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

எதிர்நீச்சல் ஞானம் :

இந்த சிரியலில் அண்ணன் சொல்பேச்சை கேட்டு நடக்கும் தம்பிகள் மத்தியில் வீட்டிற்கு மருமகளாக வரும் பெண் அந்த வீட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்பதை மையமாக கொண்டு கதை நகருகிறது. இந்த சீரியலில் ஞானம் என்ற கதாபாத்திரத்தில் வரும் கமலேஷ் அண்ணன் சொல்வது தவறு என்று தெரிந்தும் அதற்கு எதிர்ப்பு கூறாமல் யோசித்தபடி இருக்கும் கதாபாத்திரமாக கமலேஷ் இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் காமேஷ் மனைவி சிந்துஜா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் அந்த பேட்டியில் தன்னுடைய கணவர் பற்றி சில விஷியங்களை கூறியிருந்தார்.

ஞானம் கதாபாத்திரத்தை பிடிக்கவில்லை :

அவர் கூறுகையில் "என்னுடைய கணவருக்கும் எனக்கும் நல்ல புரித்தல் இருந்தாலும் கூட சில சமயங்களில் பிரச்சனைகள் வரும் அப்படி வரும் போது அது அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும். ஆனால் சீரியலில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டது. எனவே எனக்கு எதிர்நீச்சல் சீரியல் ஞானம் கதாபாத்திரத்தை பிடிக்கவில்லை. இவனெல்லாம் ஒரு மனிதனா என்று தோன்றுகிறது. ஆனால் அந்த கதாபாத்திரம் என்னுடைய கணவர் என்று நினைக்கும்போது அதனை ரசிக்க தோன்றுகிறது.

என்னை பாவம் என்று கூறுவார்கள் :

கமலேஷ் ஆனந்தம் சிரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போது நான் செல்லும் இடமெல்லாம் என்னை பலர் பாவம் என்று கூறுவார்கள். உன் கணவர் ஏற்கனவே உன்னை திருமணம் செய்து கொண்டு இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருப்பதாக சொல்வார்கள். இதனை கேட்பதற்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் போக போக பழகி விட்டது. இப்போதெல்லாம் யாரவது என்னிடம் கமலேஷ் பற்றி கேட்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அவருடைய கதாபாத்திரத்தை அவர் திறன்பட நடிக்கிறார்.

காமலேஷிடம் பிடித்து :

அதே போல எதிர்நீச்சல் ஞானம் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வி பலரிடம் எழுகிறது. உண்மையில் கமலேஷ் மிகவும் ஜாலியான கேரக்டர். ஆனால் சட்டென்று கோபப்படுவார். இருந்தாலும் கோவம் எல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான் இருக்கும். அதற்கு பிறகு அவர் சாந்த்தமாகி விடுவார். இதுதான் என்னுடைய கணவரின் சிறப்பு என்று கமலேஷ் மனைவி சிந்துஜா அந்த பேட்டியில் கூறினார்.

12 வருட கனவு :

கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிந்துஜாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் திருமணம் செய்து 12 வருடங்களாக குழந்தை இல்லையாம். தங்களிக்கு இனி குழந்தை பிறக்குமா? பிறக்காதா? என்ற கேள்வியில் இருந்த இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தை தான் தங்களுடைய மொத்த உலகம் என்று சிந்துஜா கூறினார். மேலும் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் குடும்பத்தோடு அதிக நேரத்தை செலவிடுவாராம். சீரியலில் அன்பே கட்டண கதாபாத்திரமாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் தன்னுடைய குழந்தைதான் எங்களுக்கு எல்லாமே என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full