சிறு வயதிலேயே அசினுடன் கஜினி படத்தில் நடித்துள்ள எதிர் நீச்சல் சீரியல் பிரபலம் - யார் தெரியுமா?

By Arun · 30/1/2024

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் அருண் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

மேலும், இந்த சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாவர் நடிகர் சாணக்கியா. இந்த நிலையில் நடிகர் சாணக்யாவை குறித்து பலரும் அறியாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் அறிமுகமானவர். இவர் சின்ன திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரைகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

அசின் படத்தில் சாணக்கியா:

இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் தான் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் கோபியின் மகனாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு சூர்யா- அசின் நடிப்பில் வெளியாகியிருந்த கஜினி படத்தில் அசின் ஒரு விளம்பரத்தில் நடிப்பது போன்ற காட்சி வரும். அந்த காட்சியில் அவருக்கு குழந்தையாக சாணக்யா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த வியாபாரி படத்திலும் இவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த பரமசிவன் படத்தில் நடித்திருக்கிறார். பின் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடிகர் ஜெய்யின் குழந்தை பருவ காட்சியில் சாணக்கியா நடித்திருக்கிறார்.

சூர்யாவின் ஆதவன் :

அதன் பின் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் குழந்தை பருவ சூர்யாவாக இவர் தான் முதலில் நடித்திருந்தது. அதற்கு பிறகு தான் சூர்யா நடித்தார். மேலும், வளர்ந்து இவர் முதன்முதலாக ஜீ தமிழில் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டாய் என்ற சீரியலில் நடிகனாக நடித்திருக்கிறார். இப்படி இவர் பல சீரியல்களில், திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தான் சாணக்கியாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full