என்னது, எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு கல்யாணம் ஆயிருச்சா ? இவருடைய கணவர் இவர் தானா ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

By subhashini · 5/4/2023

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா கணவரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை.

சீரியலில் மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல்:

இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் அருண்- ஆதிரை திருமணம் நடக்க பல டிவிஸ்டுகள் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் இந்த சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலருமே விரும்பி பார்த்து வருகிறார்கள்.

மதுமிதா குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியில் தான் படித்தார். அதன் பின்பு 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சீரியலில் நடித்தார். அதன் மூலம் தான் இவருக்கு சீரியல்களில் வாய்ப்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து இவர் கன்னடாவில் பல சீரியல்கள் நடித்திருக்கிறார். தற்போது இவர் கன்னடம், தெலுங்கு சின்னத்திரை சீரியல்களின் நடித்திருக்கிறார்.

மதுமிதா கணவரின் புகைப்படம்:

ஆனால், எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மதுமிதா அழகாக தமிழ் பேசி வருகிறார். இந்த நிலையில் மதுமிதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாக ஒரு தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதாவது, நடிகை மதுமிதா அவர்கள் பிசினஸ் செய்து வரும் நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று செய்திகள் பரவி வருகிறது.

நெட்டிசன்கள் பதிவு:

அதிலும் இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் என்றும். இவர்களுக்கு சொந்தமாக மும்பையில் வீடும் இருக்கிறது என்றும், தற்போது இவர்கள் பெங்களூரில் தான் வசித்து வருகிறார்கள் என்றும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மேலும், மதுமிதா ஒரு ஆணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பரப்பி வரும் சிலர் இவர் தான் மதுமிதாவின் கணவர் என்று கூறி வருகின்றனர். இதை பார்த்த பலரும், மதுமிதாவுக்கு திருமணம் ஆகி விட்டதா? உண்மையாகவா? என்று ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full