எதிர்நீச்சல் சீரியல் அருண் அம்மா-அப்பா யார் தெரியுமா? அவங்களும் பிரபலமான நடிகர்கள் தான்!

By subhashini · 4/7/2023

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் அருணின் அம்மா- அப்பா குறித்த விவரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

சீரியலில் ஜனனி அவர்கள் ஆதி குணசேகரன் வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். மேலும், சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியலில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது.

எதிர்நீச்சல் சீரியல்:

இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருக்கிறது. அதோடு பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாவர் நடிகர் சாணக்கியா. இந்த நிலையில் நடிகர் சாணக்யாவை குறித்து பலரும் அறியாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் அறிமுகமானவர். இவர் சின்ன திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரைகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

அருண் குறித்த தகவல்:

இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் தான் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் கோபியின் மகனாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு சூர்யா- அசின் நடிப்பில் வெளியாகியிருந்த கஜினி படத்தில் அசின் ஒரு விளம்பரத்தில் நடிப்பது போன்ற காட்சி வரும். அந்த காட்சியில் அவருக்கு குழந்தையாக சாணக்யா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த வியாபாரி படத்திலும் இவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.

சாணக்கியா நடித்த படங்கள்:

அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த பரமசிவன் படத்தில் நடித்திருக்கிறார். பின் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடிகர் ஜெய்யின் குழந்தை பருவ காட்சியில் சாணக்கியா நடித்திருக்கிறார். அதன் பின் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் குழந்தை பருவ சூர்யாவாக இவர் தான் முதலில் நடித்திருந்தது. அதற்கு பிறகு தான் சூர்யா நடித்தார். மேலும், வளர்ந்து இவர் முதன்முதலாக ஜீ தமிழில் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டாய் என்ற சீரியலில் நடிகனாக நடித்திருக்கிறார். இப்படி இவர் பல சீரியல்களில், திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தான் சாணக்கியாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சாணக்கியா அம்மா-அப்பா:

இந்த நிலையில் நடிகர் சாணக்யாவின் அம்மா- அப்பா குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது .நடிகர் சாணக்யாவின் அம்மா- அப்பா இருவரும் பிரபலமான நடிகர்கள் தான். சாணக்யாவின் அம்மா சின்னத்திரை நடிகையாக இருக்கிறார். இவர் பெயர் கீதா சரஸ்வதி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமான தோழி தொடரில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வெள்ளி திரைகளும் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய அப்பா மலையாள நடிகர். சமீபத்தில் அவர் நடித்த வெப்சிரீஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full