அழுதும் கூட மனம் இறங்கவில்லை திருச்செல்வம்? எதிர்நீச்சல் 2ல் இருந்து நீக்கப்பட்ட பிரபலம் சொன்ன குற்றச்சாட்டு
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருந்த சீரியலில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று இருந்தது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டம், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.
மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன்- தம்பிகள் வாழ்வார்கள். இவர்கள் இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருப்பார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்துவார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்து இருப்பார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருவார்.
எதிர்நீச்சல் சீரியல்:
இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க, வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கும். இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுவார்கள். இறுதியில் அந்த பெண்களின் நிலைமை என்ன? அவர்கள் வாழ்க்கையில் சாதித்தார்களா? ஆண் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டதா? என்று சீரியல் விறுவிறுப்பாக சென்று இருந்தது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீரியலை திடீரென சீரியல் குழுவினர் முடித்து விட்டார்கள். இது எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருந்தது.
சீரியல் பற்றிய தகவல்:
கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டது. மேலும், இந்த சீரியல் முடிந்தவுடன் இதன் இரண்டாம் பாகம் வரும் என கூறப்பட்டது. ஆனால், நீண்ட நாட்களாக சேனல் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. சமீபத்தில் தான் ‘எதிர்நீச்சல் 2’ தொடரின் ப்ரோமோ வெளியாகி இருந்தது. இந்தத் தொடர் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி இருக்கிறது. அதோடு இந்த சீரியலின் முதல் பாகத்தில் நடித்த மாரிமுத்து அவர்கள் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு பயங்கர பேமஸ். அவரின் மறைவிற்கு பிறகு வேல ராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
https://www.youtube.com/watch?v=2TN8iLWHOOA
நடிகர்கள் மாற்றம்:
மேலும், ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி போன்ற முன்னணி நான்கு கதாபாத்திரங்களை வைத்து தான் இந்த இரண்டாம் பாகமும் நகர்கிறது. இதில் ஜனனிகதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா விலகி விட்டார். இவருக்கு பதிலாக பார்வதி நடிக்கிறார். கடந்த 23ஆம் தேதி முதல் எதிர்நீச்சல் 2 சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் பலர் இரண்டாம் பாகத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஜனனி, தாரா, ஐஸ்வர்யாவாக நடித்த சில பேர் மற்றும் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை.
தாராவின் குமுறல்:
இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் நந்தினியின் குழந்தையாக தாரா கதாபாத்திரத்தில் நடித்த அன்சாரி பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில், என்னை வேண்டும் என்றே எதிர்நீச்சல் 2ல் மாற்றி விட்டார்கள். நான் ரொம்ப அழுந்தேன். இருந்தாலுமே திருச்செல்வம் அங்கிள் மனம் இறங்கவில்லை என்று ரொம்ப எமோஷனலாக பதிவு போட்டிருந்தார். இவருடைய பதிவு தான் இணையத்தில் பேசும்பொருளாகி வருகிறது.
இது உண்மையிலேயே அன்சாரி போட்ட பதிவா? இல்லை அவருடைய பெயரில் யாராவது சோசியல் மீடியாவில் குழப்பத்தை ஏற்பட்ட பதிவா? என்று தெரியவில்லை. இது தொடர்பாக சீரியல் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.