லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் கூட்டணியில் உருவாக இருக்கும் கமலின் 232 – வது படத்தின் போஸ்டர் பிரபல ஹாலிவுட் படத்தின் போஸ்டரின் காபி என்று சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’யிலும் பதித்து சாதித்து காட்டினார்.

இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.இந்த படத்தின் பணிகள் எப்போது முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவோம் என்று மாஸ்டர் குழு உறுதியாக இருந்து வருகிறதாம். இப்படி ஒரு நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்து வந்தது.

Advertisement

ஏற்கனவே மாஸ்டர் படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து படம் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. எதிர்பார்த்தது போலவே கமல் தயாரிப்பில் தான் லோகேஷின் அடுத்த படம். இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் நேற்று வெளியானது. அந்த படத்திற்கு எவன் என்று நினைத்தாய் என்ற தலைப்பையும் வைத்துள்ளனர்.

நேற்று (செப்டம்பர் 16) மாலை 6 மணிக்கு இந்த படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் துப்பாக்கியால் உருவாக்கப்பட்ட கமலின் புகைப்படமும் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்தாதத்ம் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘தி மெக்கானிக்’ படத்தின் போஸ்டர் போலவே உள்ளது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement
Advertisement