பெண்களுக்கு மார்பகங்கள் இருப்பது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தானே! என்று பிரபல நடிகை போட்ட பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். பிரபாஸ் நடிப்பில் தமிழில் வெளியான சாகோ திரைப் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை எல்வின் ஷர்மா. ஆனால், அதிகம் இவர் பாலிவுட்டில் தான் நடித்து இருக்கிறார். அதோடு இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. எல்வின் ஷர்மா மாடலாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார்.

எல்வின் குடும்பம்:

அதற்குப் பின் அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் 2004ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்தார். 2019 வரை இவர் படங்களில் நடித்து வந்தார். இதனிடையே எல்வின் ஷர்மா அவர்கள் Tushaan Bhindi என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் அழகான குழந்தை பிறந்துள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், எல்வின் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

Advertisement

எல்வின் குழந்தை உடன் எடுத்த புகைப்படம்:

அதில் அவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோசூட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் இவர் கர்ப்பமாக இருக்கும் காலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் பதிவிட்டிருந்தார். சமீபத்தில்தான் இவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் எல்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படம் லட்சக்கணக்கான பேர் பார்த்து வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும் ,பலர் நேர்மறையான பாசிட்டிவான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். ஆனால், சிலர் எல்வின் செயலை கண்டித்து விமர்சித்திருக்கிறார்கள். அதோடு எல்வின் தாய் பால் கொடுக்கும் புகைப்டத்தை வைத்து பயங்கரமாக ட்ரோல் செய்து இருந்தார்கள். இந்நிலையில் இது குறித்து அஎல்வின் பேட்டி ஒன்றில் அளித்து இருந்தார். அதில் அவர் கூறி இருப்பது,

Advertisement

தாய்ப்பால் குறித்து பேசிய பாலிவுட் நடிகை எல்வின்:

ஒரு புதிய அம்மாவாக வாழ்க்கை தொடங்கும்போது மனரீதியாக சோர்வாக இருக்கும். ஆனால், அம்மாக்கள் தாங்கள் தனியாக இல்லை என்று தெரிவிக்க என் கதையை பகிர்ந்து கொண்டேன். தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் எனக்கு வலிமை கிடைக்கிறது. நான் அதை அழகாக பார்க்கிறேன். தாய்ப்பால் என்பது மிகவும் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்று. உண்மையில் பெண்களுக்கு மார்பகங்கள் இருப்பது தாய்ப்பால் கொடுப்பதற்கு தானே?

Advertisement

பாலிவுட் நடிகை புகைப்படம்:

அதைக் கூறுவதற்கும், அது சம்மந்தமான புகைப்படங்களை பதிவு செய்வதற்கும் ஏன் வெட்கப்பட வேண்டும்? என்று கூறியிருக்கிறார். இப்படி இவருடைய தைரியமான பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தும், ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டும் வருகிறார்கள். சமீபகாலமாகவே நடிகைகள் தங்களுடைய கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களையும் பிரசவத்திற்கு பின் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையின் புகைப்படத்தை விமர்சித்தவர்க்கு பதிலடி கொடுத்த நடிகையின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement