பிங்க் ரீ-மேக் தான்.! ஆனா 'தல59'-ல் இத்தனை மாற்றமா.! ஒரே ஒரு வருத்தம் இதான்.!

By Rajkumar · 31/1/2019

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது 'தல59' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தீரன் பட புகழ் வினோத் குமார் இயக்கி வருகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிக்கும் இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்று தான். ஆனால், அதனை அப்படியே எடுக்காமல் சில மாற்றங்களை செய்துள்ளனராம்.

இதையும் படியுங்க : தல 59 படத்தின் தலைப்பு இது இதுதானா.! இருந்தா செம மாஸா தான் இருக்கும்.! 

இந்த படத்தில் நடிகர் அஜித் சமூக அக்கறை கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளதால், இதில் ஒரு பாடல் 3 பெண்களுக்கான பாடலாம்.

அதில் ஒரு பாடல் அஜித் மற்றும் வித்யா பாலனுக்கும் மற்ற 2 பாடல்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்களுக்கும் என்று கூறப்படுகிறது. இதில் வருதமான செய்தி என்னவேனில் இந்த படத்தில் அஜித்திற்கு இன்ட்ரோ சாங் எல்லாம் கிடையாதாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full