பகத் பாசிலின் தந்தை இயக்கியிருக்கும் படங்களின் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பகத் பாஸில். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் வேற யாரும் இல்லை, இயக்குனர் பாசிலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குனர் பாசில் அவர்கள் தமிழில் பிரபலமான இயக்குனர் ஆவார்.

நடிகர் பகத் அவர்கள் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகுக்கு அறிமுகமாகியிருந்தார். அதன் பின் மலையாளத்தில் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தை தொடர்ந்து இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், தெலுங்கு மொழியில் வெளிவந்த புஸ்பா போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம்.

Advertisement

பகத் பாசில் திரைப்பயணம்:

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்தது. உலகம் முழுவதும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தில் பகத் பாசிலின் நடிப்பு மிரள வைத்து இருந்தது என்றே சொல்லலாம். இதனிடையே பகத் பாஸில் அவர்கள் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியாவும் தென்னிந்திய சினிமாவுலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர். தற்போது பகத் பாஸின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாமன்னன்.

மாமன்னன் படம்:

இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தின் மூலம் பகத் அவர்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தற்போது பகத் அவர்கள் ட்ரெண்டிங் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் பகத் பாசில் தந்தை இயக்கிய படங்களின் பட்டியல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

பகத் பாசில் தந்தை:

பகத் பாசிலின் தந்தை ஒரு பிரபலமான இயக்குனர் என்பது பலரும் அறியாத ஒன்று. இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலேயே பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில், இயக்குனர் பாசில் அவர்கள் முதன் முதலில் தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்திருந்தது. இந்த படம் மட்டும் இல்லாமல் இந்த படத்தினுடைய பாடல்களும் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இதனை அடுத்து இவர் சத்யராஜை வைத்து பூவிழி வாசலிலே மற்றும் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற படங்களை கொடுத்திருந்தார்.

Advertisement

பகத் பாசில் தந்தை இயக்கிய தமிழ் படங்கள்:

இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருந்தது. அதன் பின்னர் வருஷம் 16, பிரபு நடிப்பில் அரங்கேற்ற வேலை, அமலா மற்றும் ஸ்ரீ வித்யா நடித்த கற்பூர முல்லை போன்ற பல படங்களை இயக்கியிருந்தார். அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய்யை வைத்து காதலுக்கு மரியாதை என்ற படத்தை இருந்திருந்தார். இதனை அடுத்து இவர் கண்ணுக்குள் நிலவு என்ற படத்தையும் இயக்கியிருந்தார். பின் இவர் கடைசியாக தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தை இயக்கி இருந்தார்.

Advertisement