ஹாலிவுட் பட வாய்ப்பை மறுக்க இது தான் காரணம் - நடிகர் பகத் பாசில் பகிர்ந்த தகவல்

By subhashini · 18/8/2025

ஹாலிவுட் வாய்ப்பை பகத் பாஸில் நிராகரித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட்டில் மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் Alejandro González Iñárritu. இவர் மெக்சிகோவை சேர்ந்தவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் சிறந்த இயக்குனருக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இவர் மொத்தம் 4 ஆஸ்கர் விருதுகளையும், 2015 ஆம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் வெளியான படத்திற்கு சிறந்த நடிகருக்கான முதல் ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.
அதற்குப்பின் தொடர்ந்தும் இவர் சிறந்த இயக்குனராக ஆஸ்கர் விருதை வாங்கி இருக்கிறார். தற்போது இவர் தன்னுடைய அடுத்த படைப்பை பிளாக் காமெடி ஜானரில் இயக்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு. இந்த படத்தில் டாம் குரூஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹாலிவுட் வாய்ப்பு:

இவர்களுடன் இந்த படத்தில் ஜெஸ்ஸி பிளெமன்ஸ், சாண்ட்ரா ஹுல்லர், ரிஸ் அகமது, சோஃபி வைல்ட், எம்மா டி'ஆர்சி, ராபர்ட் ஜான் பர்க் ஆகியோர் முக்கிய கதாபத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் நடிகர் பகத் பாசிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த வாய்ப்பை பகத் பாசில் மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பகத் பாஸில்,
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆடிசனுக்கு பிறகு அவருக்கு என்னை பிடிக்கவில்லை.

பகத் பாசில் பேட்டி:

அதற்கு காரணம், என்னுடைய ஆங்கில உச்சரிப்பு தான் என்பதை புரிந்து கொண்டேன். அதனால் தான் என்னை மூன்று மாதங்கள் அமெரிக்காவில் சம்பளம் இல்லாமல் தங்கச் சொன்னார்கள்.
படத்துக்காக அட்வான்ஸ் கூட கொடுக்கவில்லை. அதனால் தான் நான் அந்த ப்ராஜெக்டை விட்டு விட
முடிவு செய்தேன். ஆடிஷன் இல்லை என்றால் நான் அந்த படத்தை பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் கிடைத்து இருக்காது. இருந்தாலும் நான் அவருடன் ஒரு வீடியோ அழைப்பில் பேசினேன்.

https://www.youtube.com/watch?v=9w8EpcHhKAU

ஹாலிவுட் வாய்ப்பு மறுக்க காரணம்:

அந்த உரையாடலுக்குப் பிறகு அவர் தேடும் நபர் நான் இல்லை என்பதை உணர்ந்திருக்கலாம். அதோடு அந்த படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று எனக்குள் எந்த ஒரு எண்ணமும் இல்லை
என்று கூறியிருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பகத் பாஸில். இவர் இயக்குனர் பாசிலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகுக்கு அறிமுகமாகியிருந்தார்.

பகத் பாசில் குறித்த தகவல்:

அதன் பின் மலையாளத்தில் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தை தொடர்ந்து இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், தெலுங்கு மொழியில் வெளிவந்த புஸ்பா போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் லோகேஷ் இயக்கத்தில் பகத் நடிப்பில் விக்ரம், மாமன்னன் போன்ற படங்கள் எல்லாம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கடைசியாக பகத் பாஸில் நடிப்பில் வெளியாகியிருந்த மாரீசன் படம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஓடும் குதிர சாடும் குதிர படத்தில் நடித்து இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full