முக்கியதுவம் இல்லை என்றாலும் 'தல59'-ல் ஒப்புக்கொண்ட காரணம் அஜித் தான்.! பிரபல நடிகர் பேட்டி.!

By Rajkumar · 8/2/2019

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தனது 59 வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார். 

இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த ‘பிங்க்’ படத்தில் ரீமேக் என்பது அனைவருக்கு தெரியும். மேலும், இந்த படத்தில் பணிபுரியும் கலைஞர்களின் விவரம் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் மற்றொரு நடிகரும் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்றவர்கள் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார், அவரின் அப்பா கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில், ஹிந்தியில் நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை, தமிழில் மாற்றுவார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன், அதற்கு காரணம் அஜித் படம் என்பதால் தான். நான் இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்றதும் நிறைய போன் கால்கள் வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full