தமிழ் சினிமாவில் தமிழ் எம்.ஜி.ஆர் சிவாஜி, ஜெய்சங்கர் என பல நடிகர்களுடன் நடித்த மூத்த நடிகையான ஜமுனா இன்று ஜனவரி 27 வெள்ளிக்கிழமை 2023ஆம் ஆண்டு காலமானார். இவர்க்கு தற்போது 86 வயதாகிறது. இவர் 1936ஆம் ஆண்டு சீனிவாச ராவ் – கவுசல்யா தேவிக்கு மகளாய் பிறந்தார். இவருடைய சொந்த ஊர் அந்திரப்பிரதேசத்தில் உள்ள தெனாலிக்கு அருகில் உள்ள துக்கிரலா கிராமம். இப்படி இருந்த ஜமுனா தன்னுடைய அம்மாவின் ஒத்துழைப்பால் சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

தெலுங்கு சினிமா :

தன்னுடைய சிறு வயதிலேயே நடங்கங்களில் நடித்து வந்த இவரின் நடிப்பை பார்த்த இயக்குனர் ராஜாராவ் தன்னுடைய “புட்டில்லு” திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்ததை சரியாக பயன்படுத்திக்கொண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் 1959ஆம் ஆண்டு பிரபல நடிகரான ஏ.நாகேஸ்வராவுடன் இணைந்து “இல்லரிகம்” ஏன்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரியளவில் வெற்றி பெற்று வெள்ளிவிழா கண்டது. இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் எம்.ஜி.ஆராணா என்.டி.ஆருடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு சினிமாவில் மட்டுமே 190 படங்களுக்கும் மேலே நடித்தியிருக்கிறார்.

Advertisement

தமிழ் சினிமா :

நடிகை ஜமுனா தெலுங்கு சினிமா மட்டுமின்று தமிழிலும் சில படங்கள் நடித்திருக்கிறார். இவர் கைவிட்டு என்னும் எண்ணிக்கையிலான தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அவை ரசிகர்கள் மனதில் நிக்கும் படியான பெயரை இவருக்கு வாங்கி கொடுத்து. உதாரணமாக கடன் வாங்கி கல்யாணம், நிச்சய தாம்பூலம், குழந்தையும் தெய்வமும் ஒன்று, தங்கமலை ரகசியம், மிஸ்ஸியம்மா போன்ற படங்களிலும் எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்திலும் நடித்திருக்கிறார்.

விருதுகள் :

மேலும் இன்றும் கேட்க தோன்றும் “பாவாடை தவணையில் பார்த்த உருவமா போன்ற பாடல்களில் ஆடியில் இருகிறார்.இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் 1968ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது, 1999ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் தமிழக அரசு கவுரவ விருது, 2010ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது என பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Advertisement

அரசியல் நுழைவு :

இவர் சினிமாவில் மட்டும் நடித்துடன் இருந்து விடாமல் 80ஸ் காலங்களில் காங்கிரசு கட்சியிலும், 1989ஆம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியிலும் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் 1965ஆம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் ஜூலூரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

Advertisement

மறைவு :

நடிகை ஜமுனா கடந்த சில நாட்களாகவே வயது முதிர்வினால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் வயது முப்பு காரணமாக காலமானார். இந்நிலையில் இவரின் மறைவுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement