சுனைனா திருமணம் செய்யும் நபருக்கு விவாகரத்து ஆகி இரண்டு மகன்களே இருக்கிறார்களாம் - முன்னாள் மனைவி பரபரப்பு பேட்டி
சுனைனாவின் வருங்கால கணவரின் முன்னாள் மனைவி சலாமா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் சுனைனா. கடந்த சில வாரங்களாகவே சுனைனா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ` இன்ஸ்டாவில், சுனைனா ஒருவருடன் கைகோர்த்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்து பலருமே உங்களுக்கு திருமணமா? உங்களுடைய காதலன் யார்? என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
பின் இது தொடர்பாக சுனைனா போட்ட பதிவில், எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. நாங்கள் மோதிரம் மாத்திக் கொண்டோம். கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதை விரைவில் தெரிவிப்போம். எனக்கு வாழ்த்து சொல்லிய அனைவருக்குமே நன்றி. என்னுடைய நிச்சயதார்த்தம் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் முடிவடைந்தது என்று கூறியிருந்தார். ஆனால், இவர் திருமணம் செய்யும் நபர் குறித்து குறிப்பிட்டவில்லை.
சுனைனா நிச்சயதார்த்தம்:
இதை அடுத்து சுனைனா திருமணம் செய்யும் நபர் யார் என்று இணையத்தில் தேடி இருந்தார்கள். அப்போது பிரபல ‘யூடியூபர் காலித் அல் அமெரி’ என்பவரை தான் சுனைனா திருமணம் செய்ய இருக்கிறார் என்று தெரிய வந்து இருக்கிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தும் நடந்தது. இவர் சலமா முஹம்மது என்பவரை தான் திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு விவாகரத்து ஆனது.
சுனைனா- காலித் நிச்சயதார்த்தம்:
அதன் பின் சமீபத்தில் தான் சுனைனா- காலித் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பாக இருவருமே சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் காலித்தின் முன்னாள் மனைவி சலாமா, விவாகரத்து பிறகு நான் நன்றாகத்தான் இருக்கிறேன். திருமணத்திற்கு முன் பெற்றோர்களை சார்ந்து இருந்தேன். திருமணத்திற்கு பின் காலித்தை சார்ந்து இருந்தேன். இப்போது நான் சுதந்திரமாக சந்தோசமாக இருக்கிறேன்.
சலாமா பேட்டி:
காலித் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஆனால், சில பேரை எப்போதும் என்னால் மன்னிக்கவே முடியாது. காலித் இன்னமும் என்னுடைய வாழ்வில் இருப்பதாக உணர்கிறேன். இதற்கு காரணம், அவருடைய பழைய நினைவுகளா என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் கூறியிருந்ததை அடுத்து நெட்டிசன்கள், சலாமாவுக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். சிலர் இவர்கள் இருவரின் பிரிவிற்கு சுனைனா தான் காரணம் என்றெல்லாம் கூறிவருகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=2-y2oPLjRds
சுனைனா திரைப்பயணம்:
தமிழில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ என்ற படம் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார் சுனைனா. இதனை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக சினிமாவில் வலம் வர முடியவில்லை. கடந்த ஆண்டு இவர் எரியும் கண்ணாடி, விஷாலின் லத்தி, ரெஜினா போன்ற படங்களில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. மேலும் இவர் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.