ஆர்சிபி தோல்விக்கு மறைந்த நடிகர் புனீத் மனைவி காரணமா? - கமிஷனர் வரை சென்ற புகார்.

By Arun · 5/4/2024

ஆர் சி பி தோல்விக்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி தான் காரணம் என்று கூறப்பட்டிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டி கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எனப்படும் ஆர் சி பி அணி மொத்தம் நான்கு போட்டிகளில் விளையாடியிருக்கிறது. கடந்த 22 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் சென்னையிடம் ஆர் சி பி தோற்றது.

அதற்குப் பிறகு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை எடுத்து மூன்றாவது போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதி தோற்றுப் போனது. பின் கடந்த இரண்டாம் தேதி லக்னோ எதிராக விளையாடி அதிலும் ஆர்சிபி தோற்றுப் போனது. மொத்தம் நான்கு போட்டியில் ஒன்றில் மட்டும் தான் ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கிறது. மூன்றில் தோற்றுவிட்டது. தற்போது இரண்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் ஆர்சிபி அணி இருக்கிறது.

ஆர்சிபி அணி குறித்த தகவல்:

ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலுமே கோப்பையை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆர்சிபி களமிறங்குகிறது. ஆனால், தற்போது வரை ஆர் சி பி அணி கோப்பையை வெல்லவில்லை. இந்த முறையாவது ஆர்சிபி நன்றாக விளையாடி சாம்பியன் ஆகும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஆர்சிபி தோற்று இருக்கிறது. இதனால் ஆர் சி பி அணியின் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

நெட்டிசன் விமர்சனம்:

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி தான் என்று கூறப்பட்டிருக்கிறது. காரணம், சுப நிகழ்ச்சி ஒன்றில் சுமங்கலிகள் தான் பங்கேற்க வேண்டும். அந்த வகையில் ஆர் சி பி யின் அன்பாக்ஸ் நிகழ்ச்சிக்கு மறைந்த நடிகர் புனித் ராஜ் மனைவி அஸ்வினி புனித் ராஜை அழைத்து வந்திருந்தார்கள். இதனால் தான் அனைத்து போட்டிகளுமே ஆர்சிபி அணி தோற்று வருகிறது. மேலும், இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே ஆர்சிபி அணியின் உடைய டி-ஷர்ட் உள்ளிட்ட அனைத்திலும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பெங்களூரில் நடந்தது.

ரசிகர்கள் கண்டனம்:

இதில் அஸ்வினி புனீத் ராஜ் பங்கேற்று இருந்தார். கணவரை இழந்த நிலையில் அஸ்வினி இந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கெட்ட சகுனம் என்று நெட்டிசன் ஒருவர் கூறியிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலருமே பயங்கரமாக அந்தப் பதிவை போட்டவரை திட்டியும் கண்டனத்தை தெரிவித்தும் வருகிறார்கள். இதை தொடர்ந்து அந்த பதிவு டெலிட் செய்யப்பட்டது. பின் தவறான வகையில் விமர்சனம் செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிலும் புகார் அளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இதை பார்த்த புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி மனம் உடைந்து விட்டார்.

View this post on Instagram

A post shared by Karnataka portfolio | ಕರ್ನಾಟಕ ಪೋರ್ಟ್ಫೋಲಿಯೋ (@karnatakaportfolio_)

புனீத்ராஜ் குமார் குறித்த தகவல்:

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவரை ரசிகர்கள் எல்லோரும் பவர்ஸ்டார் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full