விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா சூர்யா? அதிரடியாக வெளிவந்த அறிக்கை - பின்னணி என்ன?
சூர்யாவின் அரசியல் பற்றி சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் ரெட்ரோ.
இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இஇருந்தார். இந்த படத்தை சுப்புராஜ் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு இருந்தது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், பிரகாஷ் ஜார்ஜ், நந்திதா தாஸ் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.
சூர்யா குறித்த தகவல்:
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதை எடுத்து தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இன்னும் சில படங்களிலும் சூர்யா கமிட்டாகி இருக்கிறார். இப்படி சூர்யா சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம் பல நல்ல காரியங்களை செய்து கொண்டு வருகிறார்.
சூர்யா அரசியல்:
அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் சூர்யா. 2006ஆம் ஆண்டு முதல் இவர் சமூக சேவையில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இதில் பல மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஏழ்மையால் கல்வி கற்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்காக இவர் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவி செய்து வருகிறார்கள். இதனால் விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் அரசியலுக்கு வரப்போகிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். கடந்த சில வாரங்களாகவே நடிகர் சூர்யா சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரவி வருகிறது.
https://www.youtube.com/watch?v=u3rq20E6QTg
சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை:
இந்நிலையில் இது தொடர்பாக சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அவர்கள், ஊடக நண்பர்களுக்கும் சமூக வலைத்தள நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில நாட்களாகவே அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
— All India Suriya Fans Club (@Suriya_AISFC) August 20, 2025
கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.
எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்.@Suriya_offl @rajsekarpandian pic.twitter.com/A8K4caAZDP
இந்த செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கும் முரணானது. கலை உலக பயணமும் அகரமும் இப்போதைய அவர் வாழ்விற்கு போதுமான நினைவை தந்துள்ளது. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலக அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள். அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும். சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியை திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி என்று கூறி இருக்கிறார்கள்.