காவாலா நடிகை தமன்னாவின் கையை பிடித்த ரசிகர் - பின் நடந்த சம்பவம். வீடியோ இதோ.

By Arun · 6/8/2023

பாதுகாப்பை தாண்டி தமன்னாவின் கையை நபர் ஒருவர் பிடித்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த கேடி படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.

தமன்னா திரைப்பயணம்:

அதோடு சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஹிந்தியில் தமன்னா நடித்திருந்த படம் பவுன்சர். இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இதனை அடுத்து தமன்னா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஜீ கர்தா என்ற தொடரிலும் தமன்னா நடித்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=Mx0Y4HkqQmY

தமன்னா நடிக்கும் படங்கள்:

மேலும், சமீபத்தில் தமன்னா நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் வெளியாகி இருக்கிறது. இந்த வெப் தொடரில் தமன்னா ரொம்ப கிளாமராக படுக்கை காட்சிகளிலும், முத்த காட்சியிலும் நடித்திருக்கிறார். சொல்லப்போனால், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் ஓவர் கிளாமராக தமன்னா நடித்திருக்கிறார். இது குறித்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை எழுந்திருக்கிறது. இதனை அடுத்து தற்போது தமன்னா அவர்கள் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

ஜெயிலர் படம்:

இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதில் தமன்னா ஆடி இருந்த காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. இதனை அடுத்து அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்திலும் தமன்னா கதாநாயகியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வைரலாகும் தமன்னா வீடியோ:

இந்த படத்தை மகிழ்ந்திருமேனி இயக்க இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமன்னா கையை நபர் ஒருவர் பிடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தமன்னா கலந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் தமன்னாவை சுற்றி இருந்த பாதுகாவலர்கள் எல்லாம் தாண்டி அவருடைய கையை பிடித்திருக்கிறார். பின் தமன்னாவின் பாதுகாவலர்கள் அந்த நபரை பிடித்து வெளியில் அனுப்ப தமன்னா அவர்களை தடுத்து அந்த இளைஞருக்கு கைகொடுத்து செல்பி எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full