மங்காத்தா படத்தின் Blooper வீடியோ - அஜித் அடித்தது என்ன சரக்கு ப்ரோ என்று கேலி செய்த ரசிகர். வெங்கட் பிரபு பதிலடி.

By Rajkumar · 11/2/2021

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தல அஜித். கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இந்நிலையில் தல அஜித் நடித்த படத்தின் ஸ்டன்ட் காட்சி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதோடு அஜித் அவர்களின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படங்களில் மங்காத்தாவும் ஒன்று. 2012 ஆம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மங்காத்தா.

https://twitter.com/Winter_Souljour/status/1359562302291202048

இந்த படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, லட்சுமிராய், அஞ்சலி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. அஜித் அவர்களின் திரைப்பயணத்தில் இந்த படம் முக்கியமான படமாக இருந்தது. இந்த படத்தின் ஓப்பனிங் காட்சியில் ஒரு ஸ்டண்ட் காட்சி செய்யப்பட்டிருக்கும். அந்த ஸ்டன்ட் காட்சியை நடிகர் அஜித் அவர்கள் டூப் போடாமலேயே செய்து இருந்தார்.

இதையும் பாருங்க : மேலாடையை கையில் பிடித்தபிடி லட்சுமி ராய் கொடுத்த போஸ் - சொக்கிப்போன ரசிகர்கள்.

அஜித்தின் மங்காத்தா படத்தில் தான் அஜித் படங்களில் முதன் முறையாக Blooper வீடியோ படத்திற்கு பின்னர் காண்பிக்கப்பட்டது. இதில் ஒரு காட்சியில் அஜித் மற்றும் அர்ஜுன் மற்ற போலீஸ் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுக்க, அப்போது அஜித் படு ஜாலியாக டான்ஸ் ஆடி அஜித்திற்கு சல்யூட் அடிப்பார். படப்பிடிப்பில் நடிகர் அஜித் இவ்வளவு ஜாலியாக இருப்பாரா என்று இந்த காட்சியை பார்த்த பின்னரே தெரியவந்தது.

https://twitter.com/ThalaFanAbs/status/1359565784654225410

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் இந்த Blooper வீடியோவை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து இருந்தார். இதற்க்கு மற்றொருவர் '' வெங்கட் பிரபு ப்ரோ என்ன சரக்கு அது ?? என்று கமன்ட் செய்து இருந்தார். அதாவது இந்த காட்சியில் நடிகர் அஜித், சரக்கு அடித்துவிட்டு தான் அப்படி ஆடினார் என்பது போல அவரது கமன்ட் இருக்க, அதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு 'அது அன்பு என்ற சரக்கு ப்ரோ என்று குறிப்பிட்டு #MyDearThala ' என்ற ஹேஷ் டேக்கையும் போட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full