கர்ப்பமாக இருக்க டைம்ல இப்படி எல்லாம் வீடியோ பண்ணி போடாதீங்க - காயத்ரிக்கு ரசிகர்கள் அட்வைஸ்

By Rajkumar · 15/7/2023

சில வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும், விஜய் டிவி சீரியல்கள் மட்டுமில்லாமல் நடிகைகளும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ்.

இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் இவர் முறையாக நடனமும் கற்றுக் கொண்டார். பின் இவர் தன்னுடைய கணவர் யுவராஜின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியதன் மூலம் தான் விஜய் டிவிக்கு அறிமுகமானார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்தார்.

இவர் அதிகம் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம். மேலும், இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று வருகிறார். மேலும், இவர் விஜய் டிவியில் மட்டுமில்லாமல் சன் டிவியில் மிகப்பிரபலமான சீரியலான சித்தி 2 தொடரிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி படு பிஸியான காயத்ரி அவர்கள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார்.

காயத்ரி யுவராஜ் சீரியல்கள்:

இதுவரை இவர் சரவணன் மீனாட்சி, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

View this post on Instagram

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

காயத்ரி யுவராஜ் கர்ப்பம்:

இந்த நிலையில் காயத்ரி யுவராஜ் கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காயத்திரி திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. இவர்களுக்கு தருண் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு 12 வயது ஆகிறது. மேலும், இவர்களுடைய மகனுடன் சேர்ந்து இவர்கள் எடுத்த ரிலீஸ் வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் படு பேமஸ். தற்போது காயத்ரி யுவராஜ் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

ரசிகர்கள் அட்வைஸ் :

இதை அவரே சோசியல் மீடியாவில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு சொல்லிஇருந்தார். அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் காயத்ரி மொட்டை மாடியில் நடனமாடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படி மாடி படியெல்லாம் ஏறாதீர்கள், இப்படி டான்ஸ் எல்லாம் ஆடும் போது கவனமாக இருங்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full