90ML தமிழ் சினிமாவின் சாபக்கேடு.! வாய் கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட தயாரிப்பாளர்.!

By Rajkumar · 9/2/2019

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தைஏற்படுத்தி தந்தது. தற்போது நடிகை ஓவியா ’90ML’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

https://twitter.com/Dhananjayang/status/1093922654468198400

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘குளிர் 100′ என்ற படத்தை இயக்கிய அனிதா உதீப் ஓவியா நடிக்கும் ’90ML’ இயக்குகிறார். Nviz எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த படத்திற்கு நடிகர் சிம்பு தான் இசையமித்துள்ளார். அதோடு இந்த படத்தில் ஒரு கௌவரவ தோற்றத்திலும் நடிக்க போகிறாராம் நடிகர் சிம்பு.

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அந்த டீசரில் படு மோசமான வசனங்களும், முத்தக் காட்சிகளும் இடம்பெற்றதால் ஓவியாவின் ரசிகர்கள் அதிர்ந்து போகினர். இந்நிலையில் இந்த படம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் டீவீட் செய்திருந்தார்.

https://twitter.com/jill_online/status/1094022568992894982

https://twitter.com/mannathi_mannan/status/1093929031668563973

https://twitter.com/vanghipuram/status/1093949278580441088

இவர் தமிழில் சேட்டை, அஞ்சான், mr சந்திரமௌலி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 90 ml படத்தின் டீசர் குறித்து பதிவிட்டதை கண்ட ரசிகர்கள் நீங்கள் தானே ரெஜினா பிகினியில் நடித்த mr சந்திரமௌலி படத்தை எடுத்தது என்றும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு மட்டும் ஏன் ஆதரவாக ட்வீட் செய்தீர்கள் என்றும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full