அனுஷ்கா இப்படி ஆனதுக்கு காரணமே அந்த இயக்குனர் தான் - அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

By Rajkumar · 20/2/2023

தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.பிரபலமானார். அதன் பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார்.

அனுஷ்கா அவர்கள் அருந்ததி, பாகுபலி போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அம்மணிக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க ஒரு பக்கம் உடல் எடையும் அதிகரித்தது. மேலும், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

உடல் எடை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை :

இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மீண்டும் சென்ற வண்ணம் இருந்தன. ஆனால், தற்போது அம்மணிக்கு மீண்டும் உடல் எடை கூடியுள்ளது. சமீபத்தில் அனுஷ்காவின் சில லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது.

மீண்டும் குண்டான அனுஸ்கா:

அதில் ஸ்லிம் தோற்றத்தில் மாறி இருந்த அனுஷ்கா மீண்டும் கொழு கொழுவேன பப்லி தோற்றத்திற்கு மாறி இருந்தார்.மகா சிவராத்திரியை முன்னிட்டு அனுஷ்கா தனது தாயுடன் பெங்களூருவில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கபட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. அதில் அனுஷ்கா மிகவும் குண்டாக தெரிகிறார். உடனே நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் வடிவில் டிரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இயக்குனரை திட்டும் நெட்டிசன்கள் :

அனுஸ்கா இப்படி உடல் எடை கூடி இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் பலர் இஞ்சிஇடுப்பழகி (size zero) இயக்குனரை திட்டி தீர்த்து வருகின்றனர். அந்த படத்திற்காக தான் அனுஷ்கா உடல் எடையை கூட்டி இருந்தார். அதனால் தான் அனுஸ்காவிற்கு தற்போதும் உடல் எடை குறையாமல் இருக்கிறது என்று இஞ்சிஇடுப்பழகி இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

அனுஷ்கவிற்கு இருக்கும் அறிய நோய் :

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்கா 'எனக்கு சிரிப்பு வியாதி இருக்கிறது, இதென்னடா மனிதன் சிரிப்பது ஒரு பிரச்சனையா என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இது வேறு மாதிரியான சிரிப்பு. நான் சிரிக்க தொடங்கினால் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரையில் சிரித்துக்கொண்டே இருப்பேன். சினிமாவில் காமெடி காட்சிகள் வந்தால் நான் சிரித்துக்கொண்டே இருப்பேன். நான் நினைத்தால் கூட என் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது.' என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full