ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் ரசிகர்கள் - சப்ரைஸ் கொடுத்த ரகுமான்

By subhashini · 25/5/2023

ஆதரவற்றோர் இல்லத்தில் நடிகர் ரகுமானின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ரகுமான். 1986 ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய நிலவே மலரே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், நடிகர் ரகுமான் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் இவர் 1984ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 16 மலையாள படங்களில் நடித்து அசத்தினார். பிறகு ரகுமான் அவர்கள் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சிறிய இடைவெளிக்கு பின் இவர் நடித்த துருவங்கள் பதினாறு படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. பின் அன்றிலிருந்து இன்று வரை பல ஹிட் படங்களில் நடித்தார் ரகுமான். தற்போது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் மதுராந்தக சோழனாக நடித்திருக்கிறார்.

ரகுமான் நடித்த படங்கள்:

முதல் பாகத்தை தொடர்ந்து பொன்னியின் முதல் 2 படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தின் மூலம் ரகுமானுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்தும் இவர் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமா உலகில் முக்கியமாக பேசப்படும் பிரபலங்களில் ரகுமானும் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

ரகுமான் பிறந்தநாள்:

இந்த நிலையில் நடிகர் ரகுமானின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள திரை உலகில் நடிகர்களின் பிறந்த நாளை அவருடைய ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நடிகர் ரகுமானின் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை கொஞ்சம் வித்தியாசமான முறையில் பயனுள்ளதாக கொண்டாடுகிறார்கள். அதாவது, கேரளாவில் திருச்சூர் பகுதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் பெண்கள் இல்லத்தில் நடிகர் ரகுமானின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.

ரசிகர்கள் செய்த செயல்:

தற்போது ரகுமானிற்கு 55 வயது ஆகிறது. மேலும், அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை என அனைவரிடம் சேர்ந்து கேக் வெட்டி ரகுமானின் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அங்கிருந்த அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி இருக்கிறார்கள். மேலும், ரகுமானின் பிறந்தநாள் அன்று அவருடைய பாடல்களை ரசிகர்கள் பாடி இருக்கிறார்கள்.

கோரிக்கை வைத்த ரசிகர்கள்:

கோரிக்கையை நிறைவு செய்த ரசிகர்கள்:அதுமட்டுமில்லாமல் அங்கிருந்த பெண் ரசிகை ஒருவர் ரகுமானிடம் பேச விரும்புவதாக கோரிக்கை வைத்திருக்கிறார். உடனே இதை அறிந்த சில நிமிடங்களிலேயே ரகுமான் வீடியோ காலில் வந்து அங்கிருந்த ஒவ்வொரு உடனும் நலம் விசாரித்து இருக்கிறார். பின் அங்கு இருந்த அனைவருமே ரகுமானுக்கு வீடியோக்களில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இப்படி கேரளாவில் உள்ள பல இடங்களில் நடிகர் ரகுமானின் ரசிகர்கள் பல சமூக சேவைகளை செய்து அவருடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full