பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து ‘கூர்கா 2, Money Heist’ போன்ற ஹாஸ்டேக்குகள் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது.

Advertisement

பீஸ்ட் படத்தின் ட்ரைலர்:

இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ‘ஜாலியோ ஜிம்கானா’ சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இருந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லர் ஆரம்பத்தில் செல்வராகவன் கதை சொல்வது போல் காண்பிக்கிறார்கள். ஒரு மாலை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள்.

பீஸ்ட் குறித்து எழும் விமர்சனம்:

இவர்களை விஜய் காப்பாற்றுவது போல் மூன்று நிமிட வீடியோவை காண்பித்திருக்கிறார்கள். தற்போது இந்த ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் ஹாலிவுட் படம் Die hard, கூர்கா 2, Money Heist போன்ற படங்களின் பாணியில் இருப்பதாக விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் படத்தின் கதை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், ட்ரைலர் மூலம் பீஸ்ட் படத்தின் கதை இதுதானா? என்று கேட்கும் அளவிற்கு உள்ளது.

Advertisement

பீஸ்ட் படத்தின் கதை:

இந்திய உளவுத்துறையில் விஜய் பணிபுரிந்து வருகிறார். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். அப்போது அரசாங்கத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. கடத்தப்பட்ட மாலில் தனது துறையை சேர்ந்த ஸ்பை வீர ராகவன் இருப்பதை அறிந்து அவரிடம் மால்லையும் மக்களையும் காப்பாற்றும் பொறுப்பை செல்வராகவன் ஒப்படைக்கிறார். இந்த கடத்தலில் இருந்து விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன?

Advertisement

பீஸ்ட் ரிலீஸ் குறித்த தகவல்:

திட்டமிட்டவர் யார்? என்பது தான் பீஸ்ட் படத்தின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் பீஸ்ட் படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் பட கதை குறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். முன்கூட்டியே படத்தின் கதை தெரிந்துவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் வெற்றி பெறுமா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement