நயன்தாராவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்ன தான் ஆச்சி நயன்தாராவுக்கு? என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியா முழுவதும் இதை பற்றிய பேச்சு தான் அதிகமாக உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடனும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் திகழ்பவர் நயன்தாரா. இவர் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்திருக்கிறார். இடையில் இவருடைய படங்கள் தோல்வியடைந்திருந்தாலும் ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ஒட்டு மொத்த திரை உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார் நயன்.

அதனை தொடர்ந்து நண்பேன்டா, விசுவாசம், பிகில் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதிலும் சமீப காலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சினிமாவின் உச்ச நடிகையாக நயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

நயன்தாராவின் திரை பயணம்:

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன் திகழ்கிறார். மேலும், இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். தன் காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நயன்தாரா படங்களை தயாரித்து வருகிறார். அதோடு நயன்தாரா பிசினஸ்வுமனாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்தா படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.இதனை தொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி நயன் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார்.

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழில் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல 2 காதல், அஸ்வின் சரவணன் இயக்கும் கனெக்ட், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் கோல்ட், தெலுங்கில் மோகன் ராஜா இயக்கும் காட்பாதர் போன்ற பல படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். இதுதவிர இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் என்பவர் இயக்கும் O2 என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இப்படி நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பிசியாக வலம் வந்து இருந்தாலும் தனது காதலுருடன் சேர்ந்து சுற்றுலா பயணமும் செல்கிறார்.

Advertisement

நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம்:

ஆறு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். அப்படி என்ன தான் அந்தப் புகைப்படத்தில் இருக்கிறது என்றால், நயன்தாரா அவர்கள் சமீபத்தில் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் நடித்திருக்கிறார். ஆனால், அது என்ன விளம்பரம் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா மிகவும் ஒல்லியாக உள்ளார்.

Advertisement

ரசிகர்களின் குமுறல்:

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள். பின் நயன்தாரா கழுத்தில் சுருக்கம் தெரியும் அளவிற்கு ஒல்லியாக இருக்கிறார் என்றும், குல்பி போலிருந்த நயன்தாராவா? என்றும் பல எதிர்வினை கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் சிலர் ஒல்லியாக இருப்பது எப்போதும் இளமையாக இருப்பதற்கு உத்தரவாதம் தராது. அதற்கு உதாரணமாக நீங்கள் இருக்கிறீர்கள். இப்படி ஒல்லியாகுவதால் உங்களுடைய அழகு மறைந்து வருகிறது என்று கூறி உள்ளனர். வேறு ஒருவரின் கழுத்தில் ஏன் நயன்தாரா உடைய முகம் ஒட்டப்பட்டு உள்ளது என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் பேசும்பொருளாக நயன்தாராவின் புகைப்படம் மாறி வருகிறது.

Advertisement