முன்னனி நடிகர்களுக்கு நிகராக சமந்தா மாஸ் காட்டி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாகமாக டாப் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

Advertisement

சமந்தா நடித்த படங்கள்:

அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம குத்தாட்டம் போட்டிருந்தார். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் சமந்தாவுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் சாகுந்தலம், திரில்லர் கதை அம்சம் கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

யசோதா படம்:

தற்போது இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்து இருக்கும் படம் ‘யசோதா’. இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 11ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வாடகை தாய் மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

யசோதா படம் குறித்த தகவல்:

இந்த படம் பேன் இந்தியா படமாக கருதப்படுகிறது. இந்த படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சமந்தா Myositis என்னும் Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து இருக்கிறார். எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. தற்போது யசோதா படத்தின் புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமந்தா தற்போது உடல்நிலை தேறி யசோதா படத்திற்கான புரமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

மாஸ் காட்டும் சமந்தா:

இது தொடர்பாக சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் போஸ்ட் போட்டு இருக்கிறார். இந்த நிலையில் முன்னணி நடிகர்களுக்கு நிகராக சமந்தாவின் மாஸ் காட்டும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, யசோதா படத்திற்காக ஹைதராபாத்தில் நடிகை சமந்தாவிற்கு மிகப் பெரிய கட்டவுட் ஒன்றை ரசிகர்கள் வைத்து இருக்கிறார்கள். பொதுவாகவே, விஜய், அஜித், மகேஷ்பாபு, ராம்சரண் போன்ற பெரிய நடிகர்களுக்கு தான் இந்த மாதிரி கட்டவுட்டை ரசிகர்கள் வைப்பார்கள். தற்போது சமந்தாவிற்கு ரசிகர்கள் வைத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement