உலகம் முழுவதும் தனெக்கென ஒரு ரசிகர் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் “பிகில்” படம் வெளியானது. விஜயின் பிகில் படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் தான் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி இருந்தது.

Advertisement

இதையும் பாருங்க : 5 கோடி சம்பளம், அலுவலக வாடகை 66 ஆயிரம்- துப்பறிவாளனுக்காக மிஸ்கின் கேட்ட 15 தேவைகள் இவை.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பிரபலங்கள், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட 500 பேரை மட்டும் அழைத்து நட்சத்திர ஓட்டலில் நடத்த இருப்பதாக தெரியவந்து உள்ளது. தளபதி விஜய்யின் முந்தைய படங்களான சர்க்கார், பிகில் படங்களின் இசை வெளியிட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நடிகரின் படத்தை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். ஆனால், மாஸ்டர் படம் விழாவிற்கு ரசிகர்களை அழைக்காமல் பத்திரிக்கையாளர்கள் முன்பு எளிமையாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்து உள்ளதாக தெரியவந்து உள்ளது.

Advertisement

மேலும், இந்த விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். ஏனென்றால் சமீப காலமாக விஜய் படங்கள் என்றாலே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. பிகில் படம் விழாவில் பாஸ் இருந்தும் ரசிகர்கள் சிலர் உள்ளே அனுமதிக்கபடாததால் மோதல் ஏற்பட்டு போலீசார் லேசான தடியடி நடத்திய சம்பவம், மாஸ்டர் படப்பிடிப்பில் நடந்த வருமான வரி சோதனை, போலீசார் மற்றும் அரசிடம் அனுமதி பெறுவதில் உள்ள சிரமங்கள், கரோனா வைரஸ் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மனதில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக படக்குழுவினர் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள்.

Advertisement
Advertisement