ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்- வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்-காரணம் இது தான்

By subhashini · 13/9/2024

ரசிகரின் குழந்தைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் சூட்டி இருப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.

இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்து இருந்தாலும் இடையில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தும் வருகிறார். அதுவும் சமீப காலமாக இவர் ரசிகர்களுடன் அதிகம் உரையாடியும் வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் மட்டுமில்லாமல் தனியாகவும் இவர் ரசிகர்களை சந்திக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகர் ஒருவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது அந்த ரசிகரோட குழந்தைக்கு சிவா பேரும் வைத்திருந்தார்.

ரசிகர் சந்திப்பு :

சிவா படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகரை நேரில் வர வைத்து குழந்தைக்கு பெயர் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த குழந்தைக்கு பெற்றோர்கள் நைனிதா கிருஷ்ணன் என்று பெயர் தேர்வு செய்தார்கள். அதை தான் சிவகார்த்திகேயன் குழந்தையின் காதில் மூன்று முறை சொல்லி முத்தமும் கொடுத்து இருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வந்தது. இதை பார்த்து பலரும் பாராட்டி இருந்தாலும் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

நெட்டிசன்கள் விளாசல் :

காரணம், படப்பிடிப்பு தளத்தில் ஒரு ரசிகருடைய கோரிக்கையை சிவகார்த்திகேயன் செய்தது பாராட்டுக்குரிய ஒன்று. இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் ஏதோ ஒரு தோட்டத்தில் ரசிகரை நிற்க வைத்து சிவகார்த்திகேயன் குழந்தைக்கு பெயர் சூட்டி இருந்தார். படப்பிடிப்பு தளமாக இருந்தாலுமே கேரவனில் கூப்பிட்டு அமர வைத்து சிவா பேசி இருக்கலாம். ஆனால், அது அவர் செய்யவில்லை. இது ரொம்ப வருத்தத்திற்குரிய செயல் என்றெல்லாம் கமெண்ட் போட்டு சிவகார்த்திகேயனை விமர்சித்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

கடைசியாக இவர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அயலான் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ராகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல பாலா நடித்திருந்தார்கள். ஏலியன் ஜனரில் பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அமரன்.

சிவகார்த்திகேயன் படங்கள்:

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். பின் சிவா அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம், குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்கத்தில் ஒரு படம், சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full