விஜய் வீட்டின் முன்பு இரண்டு ரசிகர்கள் செய்த செயல்.! வைரலாகும் புகைப்படம்.!

By Rajkumar · 17/5/2019

இளைய தளபதி விஜய்க்கு இருக்கு ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இவரது ரசிகர்கள் சிலர் விஜயை கடவுளாக கூட எண்ணுகிரார்கள். அதே போல இந்த ரசிகர்கள் விஜயின் வீட்டை கோவிலாகவே பார்க்கின்றனர் போல.

https://twitter.com/Karthiv56903721/status/1128880135363411969

தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க : விஜய் 63யில் இணைந்த இளம் நடிகை.! கேக் வெட்டி கொண்டாடிய விஜய்.! அப்படி யாரு.!

பொதுவாக இவரது படங்கள் வந்தாலே இவரது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். விஜய் படம் வந்தாலே அதனை திருவிழா போன்று கொண்டாடி விடுவார்கள். விஜய் தற்போது அதே போல விஜய்யின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் விஜய் வீட்டின் முன்பு குவிவதும் வழக்கமான ஒன்று தான்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டின் முன்பு இரண்டு ரசிகர்கள் கோவிலாக எண்ணி கையெடுத்து கும்பிட்டு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full