தனுஷ் - 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் இடையே இது தான் பிரச்னை - உண்மையை போட்டு உடைத்த ஆர்.கே.செல்வமணி
தனுஷ்-5 ஸ்டார் நிறுவன விவகாரம் குறித்து ஆர்.கே.செல்வமணி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் தங்களுடைய படத்தில் நடிப்பதாக சொல்லி தனுஷ் பணம் வாங்கிவிட்டு இதுவரை படப்பிடிப்புக்கு கால்ஷீட் கூட அளிக்காமல் இருக்கிறார் என்று பைவ் ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் (fefsi) ஆர்.கே செல்வமணி கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஆர்கே செல்வமணி, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னை போல் நன்மை செய்தவர்கள் யாருமே இருக்க முடியாது.
எங்களால் முடிந்த அத்தனை விஷயங்களையும் அவர்கள் கேட்காமல் நான் செய்து கொடுத்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அரசுக்கும் எனக்கும் பிரச்சனை ஏற்படுத்தும் முயற்சிகள் எல்லாம் செய்து பொய்யான குற்றசாட்டுகளை முயற்சிகள் வைத்தனர். அதனால் தான் இங்கு பேச வேண்டிய அவசியம் வந்தது. நான் இன்றும் படம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுய ஒழுக்கத்தில் என்னை விட சிறந்தவன் எவனும் இல்லை. என்னுடைய சினிமா, குடும்பம், பதவி என்று அனைத்தையும் விட என்னுடைய சுயமரியாதை தான் எனக்கு முக்கியம் என்று கூறியிருந்தார். பின் இந்த விவகாரம் தொடர்பாக பைவ் ஸ்டார் நிறுவனத்திற்கு எதிராக ஆர்.கே. செல்வமணி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார்.
தனுஷ் பட விவகாரம்:
அதில் அவர், சில வருடங்களுக்கு முன்னால் நீங்கள் தனுசுக்கு 3 கோடி அட்வான்ஸ் கொடுத்ததாகவும், அதை இப்போது அவர் 16 கோடியாக திருப்பித் தர வேண்டும் என்றும் தான் நீங்களும் உங்களுடைய கணவரும் புகார் அளித்திருந்தீர்கள். 3 கோடி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு 16 கோடி கேட்பது நியாயமே கிடையாது என்று நடிகர் சங்கத்தின் சார்பில் கூறி இருந்தார்கள். நாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளோம். அதனால் தான் வட்டி எல்லாம் சேர்த்து 16 கோடி ரூபாய் என்று நீங்கள் சொன்னீர்கள். அதற்கு நடிகர் சங்கம், நாங்கள் வட்டிக்கடை நடத்தவில்லை. சங்கம் நடத்துகிறோம். இது சரி கிடையாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். உங்களுடைய கணவர் எடுத்து கூறி மூன்று தெரிவித்தார்கள். உங்களுடைய மேல ஒரு தொகையை பெற்று தருமாறு வேண்டுகோள் வைத்தார்.
https://www.youtube.com/watch?v=l6T2QRng6Zw
ஆர்.கே.செல்வமணி ஆதங்கம்:
நடிகர் சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவரிடம் ஆலோசனை செய்து மூன்று கோடிக்கு இரண்டு மடங்கு ஆறு கோடி ரூபாய் வாங்கி தருவதாக சொன்னார்கள். அதில் 5 ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. கதிரேசன் அவர்கள் என்னுடைய நெடுநாள் நண்பர், தனுஷ் அவர்கள் என்னுடைய நண்பரின் மகன் என்பதாலும் தனிப்பட்ட முறையிலும் இதற்கு மேல் ஏதாவது பெற்று தர முடியுமா என்று முயற்சிக்கிறேன் என்று சொன்னேன். திரைப்பட சங்கங்களில் ஏற்கனவே பல அரசியல் நடந்து சங்கங்களில் நீங்களும் உங்கள் பங்கிற்கு ஒரு புதிய அரசியலை புகுத்தாதீர்கள். நாங்கள் அக்டோபர் 30க்குள் ஒரு நல்ல நியாயம் பெற்று தருவோம் என்று உறுதியளித்தோம். இது தொடர்பாக பேசிக் கொண்டுதான் வருகிறோம். கடைசியாக தனுஷ் அவர்கள், அண்ணா இந்த தொகை நியாயம் இல்லை. இருந்தாலும் உங்களுக்காகவும், தயாரிப்பாளர் சங்க வேண்டுகோளுக்காக மட்டுமே தருகிறேன்.
https://www.youtube.com/watch?v=0cWHOB8rTxc
5 ஸ்டார் நிறுவனம் அறிக்கை:
இதற்கு மேல் ஒரு ரூபாய் கூட என்னால் கொடுக்க முடியாது. இல்லையென்றால் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லட்டும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னதாக கூறியிருந்தார்.இதை அடுத்து 5 ஸ்டார் நிறுவனம் வெளியிட்ட பதில் அறிக்கையில், நடிகர் சங்க உறுப்பினர்கள் வட்டிக்கு கடன் வாங்க அதற்கென வேறு அமைப்புகள் உள்ள போது தயாரிப்பாளர்களை ஏன் நாடவேண்டும். தாங்கள் கூறுவது தயாரிப்பாளர்களை கடன் பெற்றவர்களிடம் நான் கூற முடியாது, வந்து நடித்து தருமாறு தங்கள் நண்பர் திரு.கதிரேசன் முதலில் வேண்டுகோள் வைத்து மன்றாடி நின்றது அனைவரும் மறந்துவிட்டீர்களா? பெற்ற முன் பணத்திற்கு நடித்து தருவதே நியாயம் என்று எந்த சங்கத் தலைமைகளுக்கும் தெரியவில்லையா? நடிகர் திரு.தனுஷ் அவர்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதுக்கு Five Star Creations மட்டும் முதல் காரணம் அல்ல என்று தங்களுக்குத் தெரியாதா? என்ன நடந்தது என்று ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரியவரும் என்று கூறி இருந்தார்.
ஆர்.கே.செல்வமணி பேட்டி:
இதை அடுத்து தயாரிப்பாளர் சங்க பொறுப்பாளர்கள் பேட்டியில், தனுஷ் வாங்கிய அட்வான்ஸ் பணத்திற்கு படம் செய்து கொடுக்க வேண்டும். பணம் வேண்டாம் என்று கூறியிருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆர்கே செல்வமணி, தனுஷ்- 5 ஸ்டார் கிரியேஷன் பட நிறுவன பிரச்சனையை நடிகர் சங்கத்தை வைத்து பேச வேண்டும். நடிகர் சங்கம்-தயாரிப்பாளர் சங்கம் சேர்ந்து பேசி அதை தீர்க்க வேண்டும். அதுதான் நல்ல முடிவு. நாங்கள் அதை பேசும்போது நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. அப்போது 5 ஸ்டார் கிரியேஷன் படம் நிறுவனத்தினர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். நாங்கள் தான் நியாயம் கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் போனோம் என்று சொல்ல வேண்டும். ஆனால், அதை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். இதனால் நாங்கள் பலரையுமே பகைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.