நான் வின் பண்ணுவேன்னு நம்பினேன், ஆனா- ஆதங்கத்தை கொட்டி தீர்த்த டாப் குக் டூப் குக் பெப்சி விஜயன்
டாப் குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் கிடைக்காததை குறித்து பெப்சி விஜயன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பெப்சி விஜயன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் நடன இயக்குனர், ஸ்டாண்ட் ஒருங்கிணைப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் பெப்சியின் தலைவராக இருந்தார். இதனால் தான் இவருக்கு பெப்சி விஜயன் என்று பெயர் வந்தது.
இவர் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருந்தார். இது ஒரு சமையல் சமையல் நிகழ்ச்சி.
டாப் குக்கு டூப் குக்கு:
இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருந்தார். இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். அதற்குப்பின் இவர் சன் டிவிக்கு வந்தார். இந்த நிகழ்ச்சியில் பெப்சி விஜயன், சாய் தீனா, சோனியா அகர்வால், சுஜாதா சிவக்குமார், சிங்கம் புலி, ஐஸ்வர்யா தத்தா, ஷாலினி நிவாஸ், நரேந்திர பிரசாத், சைத்ரா ரெட்டி, சுபாஷ் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும் டூப்களாக ஜீவா, அதிர்ச்சி அருண், பாரத், தீனா, மோனிஷா, ஜிபி முத்து, விஜய் முகுந்த், சௌந்தர்யா, கதிர் ஆகியோர் இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி ரசிகன் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெப்சி விஜயின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சிறப்பாக சமைத்து வந்தார். இதில் நரேந்திர பிரசாத்- சுஜாதா சிவகுமார் முதல் இடத்தை பிடித்தார்கள். இரண்டாம் இடத்தை பெப்சி விஜயன், மூன்றாவது இடத்தை சைத்ரா ரெட்டி பிடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் பெப்சி விஜயன், நான் தான் வின் பண்ணுவேன் என்று நம்பினேன்.
பெப்சி விஜயன் பேட்டி:
அந்த அளவிற்கு நல்ல கான்செப்டில் சமைத்திருந்தேன். நான் ஃபாரஸ்டி கான்செப்ட் வைத்தேன். மூலிகை சார்ந்த பொருட்களை வைத்து சமைத்து விழிப்புணர்வை கொண்டு வர நினைத்தேன். மரம், செடி, கொடி, மண் எல்லாமே சாப்பிடும் வகையில் தான் நான் செய்திருந்தேன். அவர்களும் ஆச்சரியத்துடனும் சாப்பிட்டார்கள். என்னுடைய கான்செப்ட், கடல் நீரை குடிநீராக மாற்றுவோம் என்று சொல்கிறார்கள். ஆனால், கடலுக்கு குடிநீர் போவதை தடுக்க எதையும் கொண்டு வரவில்லை.
டைட்டில் ஆதங்கம்:
அதை தான் நான் ஆதங்கத்துடன் சொல்லி இருப்பேன். அந்த தண்ணீரை சேவ் பண்ணுவதற்கு பாரஸ்ட் ரொம்ப முக்கியம். அதைத்தான் நான் நிகழ்ச்சியில் கான்செப்ட் ஆக காண்பித்தேன். மற்றவர்களுடைய சாப்பாட்டை டேஸ்ட் பார்க்கவில்லை. ஆனால், என்னுடைய சாப்பாடு நன்றாக இருந்தது. அவுட் ஸ்டாண்டிங் பெர்ஃபார்மன்ஸ் தான் நான் கொடுத்திருந்தேன். எல்லோரையும் விட ஒரு படி நான் நல்ல கான்செப்ட்டையும் விழிப்புணர்வையும் கொடுத்தேன். நான் டைட்டில் கிடைக்காதது ஆதங்கம் என்று கூறியிருக்கிறார்.