1000, 5000 பணம் கொடுத்தும் வாக்களிக்காத மக்கள், ஆனால் - விஜய்க்கு வாழ்த்து சொல்லி அறிக்கை விட்ட ஃபெஃப்சி
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் நேற்று தேர்தலின் முடிவுகள் வெளியானது. 75 வருட திமுக, 50 வருட அதிமுக என எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருக்கிறது. இது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் ஒரு தனி மனிதன் தேர்தலில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம் என்று எல்லோருமே பாராட்டி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் கொளத்தூர் தொகுதியில் நின்ற ஸ்டாலினையும் தவெக வேட்பாளர் பாபு தோற்கடித்திருக்கிறார். இதை அடுத்து பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் என பலருமே விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
விஜய் அரசியல்:
அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் அவர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் உங்களுடைய மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களின் வெற்றி ஒரு நுாற்றாண்டின் வெற்றி. கடந்த 75 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்திடாத மாபெரும் சாதனையை தாங்கள் செய்துள்ளீர்கள். கடந்த 75ஆண்டுகளில் நடந்த அனைத்து தேர்தல்களிலுமே தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் ஏதோ ஒரு கூட்டணி வைத்தே வெற்றி பெற்று உள்ளது.
விஜய் வெற்றி:
தனி ஒரு கட்சியாக இதுவரை யாரும் வெற்றி பெற்றதில்லை. தமிழகத்தில் இந்த மாபெரும் சாதனை புரிந்த உங்களுக்கு மீண்டும் ஒரு முறை எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். 1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத, தமிழக மக்கள் பணமே கொடுக்காமல் உங்களுக்கு இந்த மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள். தங்களின் வெற்றி நிச்சயமாக தமிழக சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது என்றே கூற வேண்டும். தங்களின் வேட்பாளர்கள் பலர் பரிச்சயம் இல்லாதவர்கள், ஒரு சிலர் பொதுமக்களிடம் வாக்குக்கூட சென்று சரியாக கேட்காதவர்கள்.
பெப்சி அறிக்கை:
ஆனால் வாக்கே கேட்காமல், பணம் ஏதும் கொடுக்காமல் ஒன்றரை கோடி மக்கள் உங்களுக்கு வாக்குகளை செலுத்தி உள்ளார்கள் என்றால் தங்கள் மீது மக்களுக்கு, உள்ள நம்பிக்கையும், தாங்கள் ஒரு நல்லாட்சியை தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பு, இந்த அதீத எதிர்ப்பையும், நம்பிக்கையையும் நீங்கள் காத்திட வேண்டும். தமிழகத்திற்கு ஒரு நல்ல ஆட்சியை நீங்கள் சொன்னது போல, ஒரு துாய ஆட்சியை தந்திட வேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொண்டு உங்களுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் 25ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களின் சார்பில் எங்களுடைய சகோதரன் ஆகிய உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கூறி இருக்கிறார்கள்.