பிக் பாஸ் பாலாஜி முருகதாசின் சட்டையைப் பிடித்து ஆக்ரோஷமாக திட்டிய பெண் ஆட்டோ டிரைவர்- பின்னணி என்ன?

By subhashini · 19/11/2024

பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸை ஆட்டோ பெண் டிரைவர் அடிக்க சென்றிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 4’ல் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இதனால் இவர் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பாலாஜி டைட்டில் வின்னரும் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் ‘ஃபயர்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் ‘ஃபயர்’. இதில் ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், மகாலட்சுமி, ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள்.

ஃபயர் படம்:

மேலும், ஜே.எஸ்.கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, டி.கே இசையமைத்துள்ளார். சதீஷ். ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் நான்கு பெண்களை மையமாக கொண்ட கதை என்று கூறப்படுகிறது. இப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இதை ஒரு விழிப்புணர்வு படமாக எடுத்துக் கொள்ளலாம் என்று இயக்குனர் ஜே.சதீஷ்குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

படம் குறித்த தகவல்:

படிப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் ரிலீஸுக்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் பாலாஜி முருகதாஸ், ஃபயர் படத்தில் நடித்ததற்காக ஒரு சிங்கிள் பேமெண்ட் கூட தரவில்லை. இதனால் நான் சினிமாவை விட்டு விலகுகிறேன் என பதிவிட்டு இருந்தார். இவரின் பதிவு சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருந்தது. இது தொடர்பாக நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி பதில் கொடுத்து பதிவு போட்டு இருக்கிறார். இதை அடுத்து இயக்குனர் சதீஷ் தக்க பதிலடி கொடுத்து இருந்தார்.

https://www.youtube.com/watch?v=laYi4qxYQQE

பாலாஜியை தாக்கிய ஓட்டுனர்:

இப்படி இருக்கும் நிலையில் பெண் ஓட்டுனர் இடம் பாலாஜி முருகதாஸ் அடிவாங்கி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கும் ஃபயர் படத்தினுடைய ப்ரோமோஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தை பெண் ஓட்டுநர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களுக்கு சிறப்பு காட்சி போடப்பட்டிருக்கிறது. அப்போது அங்கிருந்த ஆட்டோ பெண் ஓட்டுனர் ஒருவர் பாலாஜி முருகதாஸின் சட்டையை பிடித்து அடிக்க பாய்ந்து இருக்கிறார்.

பாலாஜியை தாக்க காரணம்:

அதற்கு காரணம், இவர் அந்த படத்தில் நாகர்கோவில் காசி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் பல பெண்களை ஏமாற்றி ஜெயிலுக்கு சென்றவர். அதனால் தான் அந்த பெண் ஆத்திரத்தில் பாலாஜி முருகதாஸின் சட்டையை பிடித்து, இத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறாயே? கல்யாணம் முடிந்தவர்கள், முடியாதவர்கள் என்று இத்தனை பேருடைய வாழ்க்கையை நாசமாக்கி விட்டாயேஎன்று பயங்கர கோபத்தில் பாய்ந்திருக்கிறார். அங்கிருந்த படக்குழுவினர் ஆரம்பத்தில் அதிர்ச்சியாகி பின் எல்லோருமே சிரித்தார்கள். இதை பார்த்த பலரும் இது உண்மையாலுமே நடந்ததா? இல்லை இது பட ப்ரமோஷனுக்காக அந்த பெண் கோபம் ஆனது போல் நடிக்கிறாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full