தங்கலான் படப்பிடிப்பு நிறைவடைந்தது - சியான் விக்ரம் போட்டுள்ள ட்விட் பதிவு.

By Manikandan · 6/7/2023

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் “கோப்ரா”. இந்த படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் வருகிறார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.

விக்ரம்-ரஞ்சித் கூட்டணி:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனான், பசுபதி, ஹரி, டேனியல் கால்டாகிரோன், பார்வதி, என பலர் நடித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப் குறித்த கதையை என்று பா.ரஞ்சித் கூறியிருந்தார்.இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டது. இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லு வெளியாகி இருந்தது.

இதனிடையே இந்த படத்தின் ஒத்திகையில் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரது விழா எலும்பு முறிந்தது. இந்த காரணத்தினால் சியான் விக்ரம் தங்கலான் படப்பிடிப்பில் சிறிது காலம் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டது. பின்னர் குணமடைந்த விக்ரம் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்தார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிப்பு நிறைவடைந்து விட்டதாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு இன்றி இட்டுள்ளார்.

அந்த பதிவில் "படப்பிடிப்பு நிறைவடைந்து, என்ன ஒரு அற்புதமான பயணம், மிகவும் அற்புதமான சில நடிகர்களுடன் பணிபுரிந்ததில் ஒரு நடிகராக நல்ல சில அனுபவன்ங்களை நான் அனுபவித்தேன். முதல் புகைப்படத்துக்கு கடைசி புகைப்படத்திற்கு இடையே 118 நாட்கள் படப்பிடிப்பு இருந்தது. எங்களை இந்த கனவில் வாழவைத்த இயக்குனர் ரஞ்சித்துக்கு மிக்க நன்றி, ஒவ்வொரு நாளும் என்று பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full