துபாயில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் Expo2020யினையொட்டி ரஹ்மானால் தொடங்கப்பட்டிருக்கும் உலகத்தரம் வாய்ந்த இசைக்கூடம் – ‘Firdause Studio by AR.Rahman’. துபாய் அரசாங்கத்தின் சர்வதேச ஒத்துழைப்புத்துறையின் ஆதரவோடும் முன்னெடுப்போடும் செயல்படத் துவங்கியிருக்கும் இந்த இசைக்கூடம் துபாயின் இசை அடையாளமாக மாறும் நாள் தொலைவில் இல்லை. அந்த அளவுக்கு உயர்தர தொழில்நுட்பங்களைக்கொண்டு இசையாக்கம், ஒலிப்பதிவு என அனைத்துத் தளங்களிலும் இயங்குகிறது.

இந்த studio மூலம் ரஹ்மானால் முறைப்படுத்தப்பட்டு அவரது தலைமையில் இயங்கும் இசைக்குழுவுக்கு ‘Firdause Orchestra’ என்று பெயர். இந்த இசைக்குழுவின் முக்கிய அம்சமே இந்தக்குழு முழுக்க முழுக்க பெண் இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் இந்தப் பெண்களெல்லாம் MENA (Middle East North Africa) என்று சொல்லக்கூடிய 23 மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளைச் சார்ந்த இசைக் கலைஞர்கள். Audition மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள்.

Advertisement

இசை என்றாலே பிற்போக்கு எனவும் அதில் பெண்களுக்கான சுதந்திரமும் மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அடிப்படைவாத நாடுகளிலிருந்து பெண்களை அழைத்துவந்து உலக இசைக்கலைஞர்களாக அடையாளப்படுத்துகிறது
Firdaus Studio. இவர்கள் பெரும்பாலும் அரேபிய இசையை மூலதனாமகக் கொண்ட தொன்ம இசைவடிவங்களையும் இசைக்கருவிகளையும் முதன்மைப்படுத்துகிறார்கள்.

Expoவுக்கு வரும் சகல இசைக் கலைஞர்களும் இந்த studioவை வலம் வருகிறார்கள். சமீப காலங்களில் இந்திய இசைக்கலைஞர்களான பி.சுசீலா, ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல் முதலானோர் studioவுக்கு வருகை தந்திருந்தனர்.
இளையராஜா Expoவில் கலந்துகொள்கிறார் என்கிற செய்தி வந்தபோதே அவரும் ரஹ்மானை சந்திப்பார் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அந்த அற்புதமான நிகழ்வு நேற்று நடந்தேறியது.

Advertisement

அதோடு நின்றுவிடாமல் Firdaus Orchestra இசைக்குழுவுக்காக இசைஞானி இளையராஜா ஏதேனும் இசையமைக்க வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் ரஹ்மான். மகிழ்ச்சியோடு ராஜாவும் இன்று சம்மதம் சொல்லியிருக்கிறார்.
விரைவில் இந்த இசைக்கலைஞர்கள் ராஜாவின் ராஜ இசையை வாசிக்க இருக்கிறார்கள்.
ராஜா compose செய்ய, ரஹ்மான் lead செய்ய இந்த இசை ஜாலம் மிகப்பெரிய சந்தோஷத் தருணம்.

Advertisement

இதை ஒரு ஆரம்பப்புள்ளியாகவேக் கருதுகிறேன். இது இன்னும் வளரவேண்டும். நடுத்தர குடும்பத்துச் சிறுவர்களை வைத்து உருவாக்கப்பட்ட ரஹ்மானின் sunshine orchestraவுக்கும் ராஜா தனது இசைப்பங்கை அளிப்பத, ரஹ்மானின் இசைப்பள்ளிக்கு கௌரவ வருகையாக ஏதேனும் செய்வது போன்ற ஆசைகள் ஒரு ரசிகனாக எனக்கு இருக்கின்றன.

ரஹ்மானின் இசையில் ராஜாவோ ராஜாவின் இசையில் ரஹ்மானோ இணையும் நாளுக்குக் காத்திருக்கலாம்.

அரபி மொழியின் இந்த Firdaus என்ற சொல்லுக்கு Paradise என்று பொருள். அதாவது சொர்க்கம் என்று அர்த்தமாம்.

Credits : இளம்பரதி கல்யாண குமார் Facebook

Advertisement