விஜய் 63 தளத்தில் தீ விபத்து உண்மை தான்.! வெளியான அதிர்ச்சி வீடியோ இதோ.!

By Rajkumar · 3/5/2019

நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். பெயரிடபடாத இந்த புதிய படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் அரங்குகள் அமைத்து நடந்து வருகிறது.

https://www.youtube.com/watch?time_continue=13&v=EhjGf_YaCFU

தற்போது இப்படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்ட பில்லி மில்லில் சுமார்  12 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீயை கண்டு பயந்து வெளியே வந்து தீ அணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. ஆனால், படத்திக்காக அமைக்கபட்ட செட் மற்றும்
கோடிக்கணக்கான பொருட்கள் தீ யில் கருகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full