தனது மெழுகு சிலை அருகில் கெத்தாக போஸ் கொடுக்கும் காஜல். வைரலாகும் புகைப்படம்.

By subhashini · 5/2/2020

கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் தான் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். தமிழில் கடந்த வருடம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தை தொடர்ந்து காஜல் அகர்வால் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது "பாரிஸ் பாரிஸ்" படம் தான். விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் ஹிந்தியில் ஒரு படம், தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 ஆகிய படங்களிலும் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ்ஸில் மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டு உள்ளது.

இந்த புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரம், லண்டன், சிங்கப்பூர், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் உள்ளது. சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, அரசியல், சினிமா என பல துறைகளில் உலகப் புகழ் பெற்றவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்படும். சிங்கப்பூரில் அமைக்கப்பட்டு உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்லுகிறார்கள். இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நட்சத்திரங்களின் மெழுகு சிலை அருகே புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். இங்கே அமைக்கப்படுகின்ற சிலைகள் மிகவும் தத்துரூபமாக அமைக்கப்படும்.

https://twitter.com/kajalTamilFC/status/1224897216835252224?s=19

ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தில் நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத் 2, பாராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், கஜோல், ஜாக்கி கான், ஐஸ்வர்யா ராய், மைகேல் ஜாக்சன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்ற பலரது உருவங்கள் உள்ளன. அதோடு நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலையும் இங்கு வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய மெழுகு சிலை அருகே நின்று போஸ் கொடுத்து உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய நடிகைகளிலேயே நடிகை காஜல் அகர்வாலுக்கு தான் இந்த மாபெரும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் இதற்கு காஜல் அகர்வாலின் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். யாருக்கும் கிடைக்காது பெருமை என்றும் கூறி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full